ETV Bharat / bharat

திருமணம் செய்யாமல் குழந்தை பெற அனுமதி கேட்டு வழக்கு: மேற்கத்திய கலாச்சாரம் போல் இல்லை; திருமணம் அவசியம் என நீதிமன்றம் அறிவுரை!

Supreme Court: ஒரு குழந்தைக்கு தந்தை, தாய் மற்றும் குடும்ப சூழல் என்பது அவசியம் என்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல் குழந்தைகள் மீது அக்கறை இல்லாமல் இருக்கும் கலாச்சாரத்தை அனுமதிக்க முடியாது எனவும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி கோரி திருமணமாகாத பெண் தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 10:14 AM IST

டெல்லி: திருமணம் ஆகாத 44 வயது பெண் ஒருவர் வாடகைத் தாய் மூலம் தாயாக அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு திங்கட்கிழமை அன்று, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் அகஸ்டின் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த பிறகு, "திருமணப் பந்தத்திற்குள் தாயாக மாறுவது இங்கே ஒரு கலாச்சாரம், திருமண உறவுக்கு வெளியே தாயாக இருப்பது வழக்கம் அல்ல. அப்படி நீங்கள் கேட்பதைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம் நாங்கள் முழுவதும் குழந்தையின் நலன் சார்ந்து பேசுகிறோம். திருமண உறவில் நாட்டில் வாழ வேண்டுமா, வேண்டாமா? என்பது உங்கள் உரிமை. ஆனால் மேற்கத்திய நாடுகளைப் போல் இருக்க ஏற்றுக்கொள்ள முடியாது. திருமண கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும். நாங்கள் இப்படிக் கூறுவதால் எங்களை பழமைவாதிகள் என்று அழைத்தால் கூட நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வோம் என நீதிபதி நாகரத்னா குறிப்பிட்டார்.

இந்தியப் பெண் என்று வரையறுக்கும் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்டத்தின் பிரிவு 2 கீழ், 35 மற்றும் 45 வயதுக்கு இடைப்பட்டவர் மற்றும் வாடகைத் தாய் விருப்பத்தைப் பெற விரும்பினாலும், திருமணமாகாத ஒரு பெண் வாடகைத் தாய் மூலம் தாயாக மாற சட்டம் அனுமதிப்பதில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அதேநேரத்தில், மனுதாரர் தாயாக மாற விரும்பினால் அதற்கு வேறு வழிகள் இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், திருமணம் செய்து கொள்ளலாம் அல்லது ஆதரவற்ற குழந்தையைத் தத்தெடுக்கலாம் எனப் பரிந்துரைத்தது. ஆனால் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மனுதாரர் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்றும், தத்தெடுப்பதற்கான காத்திருப்பு காலம் மிக நீண்டது என்றும் பதிலளித்தார்.

பின்னர் பேசிய நீதிபதிகள், அறிவியல் காலம் முன்னேறியுள்ளது. ஆனால், திருமணப் பந்தத்தை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிய முடியாது என்றும் 44 வயதில் வாடகைத் தாய் மூலம் குழந்தையை வளர்ப்பது மற்றும் வளர்ப்பது கடினம். வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெற முடியாது. மேற்கத்திய நாடுகளைப் போல் தாய், தந்தை பாசமின்றி குழந்தைகள் வளர்வதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது இது சமூக விதிமுறை அல்ல என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதையும் படிங்க: "மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும்" - மக்களவையில் பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.