ETV Bharat / bharat

நவி மும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்! - Mumbai Building Collapse - MUMBAI BUILDING COLLAPSE

நவி மும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Etv Bharat
Navi Mumbai Building Collapse (Screengrab from ANI video on X)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 9:02 AM IST

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை அடுத்த பெலாபூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டடம் இடிந்து விழும் முன் அதில் இருந்த 2 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், யாரேனும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

நவி மும்பை துணை தீயணைப்பு அதிகாரி புர்ஷோத்தம் ஜாதவ் கூறுகையில், அதிகாலை 4:50 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து எங்களுக்கு அழைப்பு வந்தது. இதுவரை இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர், ஆனால் இன்னும் இரண்டு பேர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மீட்பு பணி நடைபெற்று வருகிறது, இதற்காக பல்வேறு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று கூறினார். தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்! டெல்லியில் முகாமிட்ட பாஜக முதலமைச்சர்கள்! - NITI Aayog meet

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.