ETV Bharat / bharat

"பல்வேறு விஷயங்களை விவாதிப்பதற்கான முக்கியமான தளம்" -பிரிக்ஸ் மாநாடுக்கு செல்லும் முன்பு பிரதமர் வெளியிட்ட பதிவு - BRICS EMERGED

பல்வேறு விஷயங்களை விவாதிப்பதற்கான முக்கியமான தளமாக பிரிக்ஸ் உச்சி மாநாடு திகழும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் நரேந்திர மோடி
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் நரேந்திர மோடி (Image credits-PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2024, 1:33 PM IST

புதுடெல்லி: ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க செல்லும் முன்பு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"பல்வேறு பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் மற்றும் விவாதத்திற்கான முக்கியமான தளமாக பிரிக்ஸ் மாநாடு உருவெடுத்துள்ளது,"என கூறியுள்ளார்.

பிரிக்ஸ் நாடுகளின் 16ஆவது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இது தவிர கடந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்த எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளும் இப்போதைய உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றன.

இந்த உச்சிமாநாட்டில் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.மேலும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே ரஷ்யா அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்க் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே சந்தித்துப் பேச உள்ளார். அப்போது இருநாடுகளின் தலைவர்களுடன் இந்தியா உடனான உறவு குறித்து அவர் பேசுகிறார்.

இதனிடையே பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க செல்லும் முன்பு எக்ஸ் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,"ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விடுத்த அழைப்பின் பேரில், 16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக நான் இன்று கசான் புறப்படுகிறேன். பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது.

இதையும் படிங்க: இந்தியா - ரஷ்யா இருதரப்பு பேச்சுவார்த்தை: உக்ரைன் போர் குறித்து புதின் கூறியதும், மோடி சொன்னதும் என்ன?

உலகளாவிய வளர்ச்சித் திட்டம்,சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை,பருவநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, நிலைமைக்குத் தக்கபடி தகவமைத்துக் கொள்ளக்கூடிய விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்பை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் மற்றும் விவாதத்திற்கான முக்கியமான தளமாக இந்த பிரிக்ஸ் மாநாடு உருவெடுத்துள்ளது.

கடந்த ஆண்டு புதிய உறுப்பினர்களின் சேர்க்கையுடன் பிரிக்ஸ் அமைப்பு விரிவாக்கப்பட்டது. இந்த விரிவாக்கம் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையால் ஏற்பட்டது ஆகும். உலகளாவிய நன்மைக்கான செயல்திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது. மாஸ்கோவில் 2024 ஜூலையில் நடைபெற்ற வருடாந்திர உச்சிமாநாட்டின் அடிப்படையில், கசான் நகருக்கான எனது பயணம் இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான சிறப்பு மற்றும் முன்னுரிமை பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும். பிரிக்ஸ் அமைப்பின் மற்ற தலைவர்களையும் சந்திக்க ஆவலாக உள்ளேன்,"என்று கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.