ஐதராபாத் : தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த கோர விபத்தில் ஆலையின் மேலாளர் உள்பட 5 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 10 தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
வெடி விபத்து நடந்த இடத்தில் 8 முதல் 10 பேர் சிக்கிக் இருப்பதாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அதேநேரம் விபத்து நடந்த நேரத்தில் ஆலையில் ஏறத்தாழ 50 பேர் வரை பணியில் இருந்ததாக கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
விபத்து நடந்த தீயணைப்பு உள்ளிட்ட மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எப்படி விபத்து ஏற்பட்டது என தெரியவராத நிலையில், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயணம் திடீர் ரத்து! என்ன காரணம்? - Amit Shah Tn Visit Cancel