ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் மகாயுதி அபாரம்..! மகா வெற்றியை நோக்கி பாஜக கூட்டணி..! - MAHARASHTRA ELECTION RESULTS

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் வாக்கு என்ணிக்கையில் பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றியை தக்க வைக்கும் என பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ் (இடது) மற்றும் அஜித் பவார் (கோப்புப்படம்)
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ் (இடது) மற்றும் அஜித் பவார் (கோப்புப்படம்) (credit - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 12:49 PM IST

Updated : Nov 23, 2024, 1:16 PM IST

மும்பை: 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்துக்கு நவ.20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.

எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் 101 வேட்பாளர்களையும், சிவசேனா 95 வேட்பாளர்களையும், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் 86 வேட்பாளர்களையும் நிறுத்தின.

இந்நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 145 இடங்களை தக்க வைக்க வேண்டும் என்ற நிலையில், ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 221 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் மகா விகாஸ் அகாதி 50 இடங்களில் பின் தங்கியுள்ளது.

போட்டியிட்ட 149 இடங்களில், பாஜக 125 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா போட்டியிட்ட 81 இடங்களில் 56 இடங்களிலும், 59 இடங்களில் போட்டியிட்ட அஜித் பவாரின் என்சிபி 36 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பின்னடைவை சந்தித்துள்ள காங்கிரஸ் வெறும் 21 இடங்களிலும், சிவசேனா (யுபிடி) 17 இடங்களிலும், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் 13 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெறும் ஒன்பது இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.

முதல்வர், துணை முதல்வர்கள் நிலவரம்

வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்தனர். தேர்தல் ஆணையம் வழங்கிய புள்ளி விவரங்களின்படி, ஆறாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கோப்ரி-பச்பகாடி சட்டமன்றத் தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே 27,479 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கில் 12,402 வாக்குகள் வித்தியாசத்திலும், பாரமதி தொகுதியில் அஜித் பவார் 21,349 வாக்குகளிலும் முன்னிலையில் இருந்தார். மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் 4வது சுற்று முடிவில் சகோலி தொகுதியில் வெறும் 451 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார் என அதில் குறிப்பிட்டிருந்தது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Nov 23, 2024, 1:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.