டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 60 ஆண்டுகளில் முழுமையான மெஜாரிட்டியுடன் நிலையான அரசு நிறுவப்பட்டுள்ளது, தங்களது எண்ணங்கள் மற்றும் திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றும் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறினார்.
18வது மக்களவை பல வழிகளில் வரலாற்று சிறப்புமிக்கதாகவும், அமிர்த காலத்தின் தொடக்கத்தில் இந்த மக்களவை நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்து வரும் கூட்டத் தொடர்களில் புதிய அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யபட உள்ளதாகவும், அரசின் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை மையப்படுத்தி புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார்.
#WATCH | President Droupadi Murmu addresses a joint session of both Houses of Parliament, she says " today, india is performing well in many areas. if india performs well in the world in terms of digital payments, then we should be proud. if indian scientists successfully land… pic.twitter.com/XtG0nBxA2u
— ANI (@ANI) June 27, 2024
மத்திய பட்ஜெட்டில் பொருளாதார மற்றும் சமூதாய முடிவுகள் பல முக்கிய வரலாற்று நகர்வுகளை பட்ஜெட்டில் காண முடியும் என்று திரெளபதி முர்மு கூறினார். 18வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாட்டு மக்களின் நம்பிக்கை வென்றதன் மூலமே அனைவரும் இங்கு அமர்ந்து இருப்பதாக கூறினார்.
அரிதாக சிலருக்கு மட்டுமே நாட்டு மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அனைத்து உறுப்பினர்களும் 140 கோடி மக்களின் பிரதிநிதியாக செயல்பட்டு அவர்களின் எண்ணங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தக் கூடியவர்களாக இருப்பீர்கள் என தான் நம்பிக்கை கொள்வதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறினார்.
கோடிக்கணக்கான நாட்டு மக்களின் சார்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தான் நன்றி கூற விரும்புவதாக அவர் தெரிவித்தார். உலகின் மிகப் பெரிய தேர்தல் இது என்றும் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத அளவில் வாக்குப்பதிவாகி உள்ளது என்றார். போராட்டம், கலவரம் மற்றும் முழு அடைப்பு காரணமாக கடந்த 40 ஆண்டுகளில் குறைவான எண்ணிக்கையிலேயே வாக்குப்பதிவு நடந்ததாக அவர் கூறினார்.
குறைவான வாக்குப்பதிவு காஷ்மீர் மக்களின் கருத்து என்றும் சர்வதேச மன்றங்களில் இந்தியாவை மேற்கொள்காட்டி வந்த நாடுகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக திரெளபதி முர்மு குறிப்பிட்டார். கல்வி, சுகாதாரம், சுற்றுலா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் வளர்ச்சிக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஏறத்தாழ 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அசாம் மாநிலத்தில் செமி கண்டக்டர் தொழிற்சாலை நிறுவப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் இந்திய சிப் தயாரிப்பின் மையமாக வடகிழக்கு மாநிலங்கள் உருவெடுக்கும் என்றார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுப்பதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
#WATCH | President Droupadi Murmu says, " it is a continuous effort of the government to ensure that the youth of the country gets adequate opportunity to display their talent...my government is committed to a fair investigation of the recent incidents of paper leaks as well as… pic.twitter.com/fJpnBONP0c
— ANI (@ANI) June 27, 2024
சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்திற்கான தீர்மானம் இந்தியாவை இன்று உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றியுள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் உலக பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளதாக கூறினார்.
202-2024 இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி சராசரியாக 8 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறிப்பிட்டார். கரோனா மற்றும் போர் சூழல்கள் காரணமாக உலக நாடுகள் கடும் சரிவுகளை சந்தித்த போதிலும் இந்திஅய அதன் வளர்ச்சி விகிதத்தை சீரான இடைவெளியில் எட்டியதாக அவர் கூறினார்.
உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 15 சதவீதமாக உள்ளதாகவும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை கொண்டு வருவதற்கான பணிகளில் அரசு முழுமையாக ஈடுபடுத்தி வருவதாக கூறினார். மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பேசிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, சட்டப்பேரவை மற்றும் மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், நாரி சக்தி விதான் சட்டத்தின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுக்கு அதிகாரமளித்தலில் புதிய வரலாறு படைக்கும் வகையில் தனது அரசு ஈடுபாட்டுடன் செயலாற்றி வருவதாகவு அவர் தெரிவித்தார்.