விஜயவாடா: ராமோஜி குழும தலைவர் ராமோஜி ராவின் நினைவேந்தல் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மூத்த பத்திரிகையாளரும் இந்து குழும இயக்குநருமான என்.ராம், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் மதிப்புகளுக்காக நாம் எழுந்து நின்று போராடவில்லை என்றால், இந்தியப் பத்திரிகை வரலாற்றில் ஒரு சிறந்த மற்றும் வரலாற்று ஆளுமையாக விளங்கும் ஸ்ரீ ராமோஜி ராவின் பாரம்பரியத்தை நாம் மதிக்கவோ, நினைவுகூரவோ மாட்டோம்.
குறிப்பாக மூத்த அரசியல் தலைவரான முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இதற்கு ஆதரவளிப்பார் என எதிர்பார்க்கிறேன். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் அல்லது தேசியப் பாதுகாப்பைப் பாதுகாப்பதாகக் கூறும் சட்டங்கள் போன்றவற்றிலிருந்து ஊடகவியலாளர்கள் எங்கு தாக்கப்பட்டாலும், அவர்களுக்கு ஆதரவாக ராமோஜி ரான் வந்து நிற்பார். ராமோஜி ராவுக்கு இதுவே நமது சிறந்த அஞ்சலி.
ராமோஜி ராவின் நண்பர் மற்றும் பல ஆண்டுகளாக அவரைப் பற்றி அறிந்தவர் என்பதில் பெருமைப்படுவதாக என்.ராம் கூறினார். மேலும் 1980களில் எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியாவின் தலைவராக ராமோஜி ராவ் இருந்தபோது அவரை எப்படி முதலில் தெரிந்து கொண்டேன் என்பது குறித்து என்.ராம் நினைவு கூர்ந்தார்.
கடந்த 1988ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அரசில் அவதூறு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், இது தற்போதுள்ள குற்றவியல் அவதூறு சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம் என்றும் இந்த சட்ட மசோதா குறிப்பாக குற்றப் புலனாய்வு மேற்கொள்ளும் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களுக்கு எதிராக இருந்த நிலையில், அதை துணிந்து எதிர்த்தவர் ராமோஜி ராவ் என்று கூறினார்.
எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா இயக்கத்தின் போது ஸ்ரீ ராமோஜி ராவுடன் நெருக்கமாக தான் பணியாற்றியதாகவும் அவருடைய தலைமைப் பண்புகள், கொள்கைகளில் உறுதிப்பாடு, அடைய வேண்டிய இலக்கின் தெளிவு, அவதூறு மசோதாவை நிபந்தனையின்றி வாபஸ் பெறுவது போன்றவற்றால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்றும் கூறினார்.
மேலும் அவதூறு சட்ட மசோதாவிற்கு எதிராக ராமோஜி ராவ் உள்ளிட்டோர் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள் மூலம் ராஜீவ் காந்தியின் நிலைப்பாட்டை மாற்றி உடனடியாக அமைச்சரவையை கூட்டி அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்படாது உடனடியாக வாபஸ் பெறப்படும் என அறிவிக்க தூண்டியதாக கூறினார்.
இதையும் படிங்க: "ராமோஜி ராவுக்கு பாரத ரத்னா விருது" - ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை! - Ramoji Rao