ETV Bharat / bharat

பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை வழக்கு; முன்ஜாமீன் கோரி மனைவி மனு தாக்கல்..! - BENGALURU TECHIE SUICIDE CASE

பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மனைவி மற்றும் குடும்பத்தார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட அதுல் சுபாஷ் (கோப்புப்படம்)
தற்கொலை செய்துகொண்ட அதுல் சுபாஷ் (கோப்புப்படம்) (credit - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

பிரயாக்ராஜ்: பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அதுல் சுபாஷ் (34) கடந்த திங்கட்கிழமை அன்று அவர் வசித்து வந்த வீட்டில் தற்கொலை செய்துகொண்டநிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலைக்கு முன்னதாக அவர் வெளியிட்டிருந்த வீடியோ மற்றும் தற்கொலை கடிதத்தில், அவரது மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தார் மீது பல்வேறு குற்றச்சாடடுகளை வைத்திருந்தார்.

அதாவது, சுபாஷ் கடந்த 2019 ஆம் ஆண்டு நிகிதா சிங்கானியா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 4 வயது மகனும் உள்ளார். ஆனால், மனைவி நிகிதா அவரை விட்டு பிரிந்து நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் இவர் கணவர் அதுல் சுபாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மீது பொய் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

காவல்துறை அறிக்கை

அத்துடன், நிகிதா, அதுல் சுபாஷை அவரது மகனைச் சந்திக்கக் கூட அனுமதிக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், நிகிதா சுபாஷிடம் ரூ.30 லட்சம் பணம் கேட்டதோடு, வழக்குகளை திரும்பப்பெற ​​''3 கோடி ரூபாய் தர வேண்டும், பணம் கொடுக்கவில்லை என்றால் இறந்து விடு'' என்று சொல்லி நீதிமன்ற வளாகத்திலேயே கிண்டல் செய்ததாக சுபாஷின் சகோதரர் பிகாஸ் குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொய்யான புகார் மற்றும் பெரும் தொகைக்கான கோரிக்கை ஆகியவற்றால் மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்ட அதுல் சுபாஷ், தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து, சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா சிங்கானியா, சகோதரர் அனுராக் சிங்கானியா மற்றும் மாமா சுஷில் சிங்கானியா ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

முன்ஜாமீன் மனு

மேலும், மூன்று நாட்களுக்குள் ஆஜராகுமாறு காவல்துறை அவர்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவர்கள் இன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் பெண்களுக்கான வரதட்சணை வழக்கில் சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் அவரது வீட்டார் சட்டவிரோதமாக பழிவாங்கப்படுவதை தவிர்க்க, வரதட்சணை தடுப்பு மற்றும் குடும்ப வன்முறைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்து சீர்திருத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.