ETV Bharat / bharat

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; அசைவ உணவுகளுக்கு அசாம் மாநிலம் தடை!

Non veg ban in Assam: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அசாம் மாநிலத்தில் நாளை அசைவ உணவுகளுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அசைவ உணவுகளுக்கு அசாம் மாநிலம் தடை
அசைவ உணவுகளுக்கு அசாம் மாநிலம் தடை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 7:27 PM IST

Updated : Jan 22, 2024, 5:19 PM IST

அசாம்: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா, நாளை (ஜன.22) நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி, பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்பதால், அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வையொட்டி, பல மாநிலங்களில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, மத்திய அரசு நிறுவனங்களில் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாளை அசைவ உணவுகளுக்கு தடை விதித்து அசாம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், அசாம் மாநில மக்கள் அனைவரும் இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியிருந்தார். இந்நிலையில், நாளை அசாம் மக்கள் அசைவ உணவுகளை பயன்படுத்த கூடாது எனவும், நாளை மக்கள் விரதம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அசாமில், மாநிலம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் பிற்பகல் 2 மணி வரை மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அசாம் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், “ இறைச்சி மற்றும் மீன் கடைகள் திங்கள்கிழமை மாலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும். மாலை 4 மணி வரை, உணவகங்களில் அசைவ உணவுகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளி பண்டிகையைப் போல, அசாம் மக்கள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் எனவும், மக்கள் அனைவரும் கும்பாபிஷேகத்தைக் காணும் வகையில், அயோத்தியில் இருந்து நேரடி ஒளிபரப்பை திரையிடுவதற்காக திரைகளை பாஜகவினர் அமைத்து வருகின்றனர் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நாளை அயோத்தியின் மன்னர்கள் வீடு திரும்புகின்றனர்.. கங்கனா ரனாவத்

Last Updated : Jan 22, 2024, 5:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.