உஜ்ஜைன்: மத்திய பிரதேசத்தின் ஹமுகேதி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் யாதவ், பாரதிய ஜனதா கட்சியின் இளம் தலைவராக அறியப்படுகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் எஸ்பி பதோரியாவுக்கும், பிரகாஷ் யாதவிற்கும் இடையே பணம் விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து விசாரிக்க போலீசார், பிரகாஷ் யாதவ் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது தனது இரு சக்கர வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பதோரியா, தன்னிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் பிரகாஷ் யாதவை சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். இதில் பிரகாஷ் யாதவின் வலது நெஞ்சு பகுதியில் தோட்டா துளைத்தது.
அருகில் இருந்த போலீசார் உடனடியாக மீட்டு பிரகாஷ் யாதவை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. பிரகாஷ் யாதவின் உயிருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என தெரிவித்த மருத்துவர்கள் இருப்பினும் தொடர்ந்து ஐசியூவில் சிகிச்சை பெறுவதாக கூறினர்.
இதனிடையே துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி தலைமறைவான பதோரியாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இந்த துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் தொடர்புடையதாக பதோரியாவின் அண்ணனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! - Chile Earthquake