புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே விமான நிலையத்தில் இருந்து, டெல்லி நோக்கி பயணிக்க ஏர் இந்திய விமானம் தயாராக இருந்தது. விமானத்தில் விமான குழுவினர், பயணிகள் உள்பட 180 பேர் இருந்தனர். விமானம் பயணத்திற்கு தயாராகி ஓடுபோதையை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது விமானத்தை இழுக்க பயன்படுத்தப்படும் டிரக்கு மீது எதிர்பாராத விதமாக விமானம் மோதி விபத்தில் சிக்கியது.
இதில் விபத்தில் விமானத்தின் மூக்குப் பகுதி மற்றும் தரையிறங்க செலுத்தப்படும் கியர் அருகில் உள்ள டயர் ஆகியவை சேதமடைந்தன. இதில், விமானத்தில் பயணித்த 180 பயணிகளும் நல்வாய்ப்பாக எந்த வித காயங்களுமின்றி உயிர் தப்பினர். இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் விரைவாக வெளியேற்றப்பட்டு மாற்று விமானம் மூலம் டெல்லி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் அவசரமாக டெல்லி செல்லவேண்டிய பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான விமானம் மீட்கப்பட்டது. எப்படி விமான விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக டிஜிசிஏ விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: காதலுக்கு மறுப்பு... பெண் குத்திக் கொலை- கர்நாடகாவில் கொடூரம்! - Karnataka Woman Killed