ETV Bharat / bharat

ஹைதராபாத்தை புரட்டிய கனமழை.. 7 பேரை காவு வாங்கிய சுவர்.. 14 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை! - Hyderabad Rain - HYDERABAD RAIN

ஹைதராபாத்தில் பெய்து வரும் கனமழையால் கட்டட சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அங்கு பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெவ்வேறு விபத்துகளில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழை காரணமாக இடிந்த சுவரின் புகைப்படம்
மழை காரணமாக இடிந்த சுவரின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 12:37 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களாக வானிலை மாறி கனமழை பெய்து வருகிறது. கடந்த செவ்வாய்கிழமை அன்று கொட்டி தீர்த்த கனமழை, ஒரே நேரத்தில் 7 பேரின் உயிரை பறித்த சம்பவம் தலைநகரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹைதராபாத், பச்சுபள்ளியில் உள்ள கௌசல்யா காலனியில், அப்பார்ட்மெண்ட் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் அங்கேயே தங்கியபடி கட்டடப் பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு கட்டடப் பணிகளை முடித்துவிட்டு, தொழிலாளர்கள் தங்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ஷீட் அறையில் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது பெய்து கொண்டிருந்த கனமழையால், அருகே இருந்த 40 அடி சுவர், தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷீட்டின் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இக்கோர சம்பவம் குறித்து காவல்துறை தெரிவித்ததாவது, “விபத்து நடந்த இடத்தில் தனியார் நிறுவனம் 5 மாடி கட்டடத்தை கட்ட தொடங்கியுள்ளது. இதற்காக தொழிலாளர்கள் இங்கேயே தற்காலிக கொட்டகை அமைத்து தங்கி வருகின்றனர். இடிந்து விழுந்த சுவர் வெறும் 15 அடியில்தான் இருந்தது. அண்மையில்தான் அதை 40 அடி உயரத்துக்கு எழுப்பியுள்ளனர்.

அதனால்தான் மழைநீரால் சுவரின் அடித்தளம் வலுவிழந்து சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களில் சத்தீஸ்கர் தம்பதியர் ராமுயாதவ் (44) - கீதாபால் (40), அவர்களது மகன் ஹிமான்ஷு (4), ஒடிசாவைச் சேர்ந்த ஷங்கதேப் கவுட் (18), ஸ்ரீபதி மாஜி (23), மகாராஷ்டிரா தம்பதி பிந்த்ரேஷ் பவானி சவுகான் (30) - குஷி (20) ஆகியோர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், கட்டுமானப் பணியில் அலட்சியமாக செயல்பட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வெவ்வேறு விபத்து: சுவர் விபத்தை தவிர, கனமழைக்கு மேலும் 7 பேர் தனித்தனி விபத்தில் உயிரிழந்துள்ளனர். சின்னமங்கலார், மொயினாபாத் மண்டலத்தைச் சேர்ந்த ஜஹேரா பேகம் (47) என்பவர், அதே செவ்வாய்க்கிழமை இரவு காய்கறி வாங்குவதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது வேறொரு கட்டடத்தின் வரவேற்பு வளைவு உடைந்து தலையில் விழுந்ததில் படுகாயமடைந்தார். பின்னர், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

5 வயது சிறுவன் உயிரிழப்பு: அதேபோல, செவ்வாய் இரவு ஹயத் நகர் முதிராஜ் காலனியைச் சேர்ந்த அஞ்சலி என்பவர், தனது 3 குழந்தைகளை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு பெத்தம்பர்பேட்டை நோக்கிச் சென்றுள்ளார். குந்தலூர் சன்ரைஸ் காலனி ரோடு அருகே ஆட்டோ வந்தபோது, பலத்த காற்றினால் மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்திருப்பதை அஞ்சலி கவனித்துள்ளார். உடனே அவர் அருகிலிருந்த கட்டடத் தொழிலார்களை அழைத்து வரச் சென்றுள்ளார். இதற்கிடையே அஞ்சலியின் 5 வயது மகன் சிவசங்கர் ஆட்டோவில் இருந்து இறங்கி, அறுந்து விழுந்த மின்கம்பியை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

உயிரை பறித்த டியூப் லைட்: ரெங்கா ரெட்டி மாவட்டம், அப்துல்லாபூர்மேட்டைச் சேர்ந்த ஷேக் பர்வேஸ் (40) என்பவர், பஞ்சர் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று கனமழை பெய்துகொண்டிருந்ததால், கடையின் வெளியே இருந்த டியூப் லைட்டை கழற்றியுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார்.

அதேபோல, பீகாரைச் சேர்ந்த தர்மேந்திர குமார் யாதவ் (33) என்பவர், தனது சைக்கிளை சாந்தாநகர் கங்காரம் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் சங்கிலியால் கட்டியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதேபோல, முசரம்பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் சுயநினைவின்றி மயங்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து, கனமழை காரணமாக ஒடிசாவைச் சேர்ந்த சந்திர பாண்டா (38), மனோஜ் தாஸ் (45) ஆகியோர் பேகம்பேட் வழியாகச் சென்றபோது குழியில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

ஹைதராபாத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 10 புலம் பெயர் தொழிலாளர்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பச்சுபள்ளியில் சுவர் இடிந்து 7 பேர் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்த அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, '' விபத்து குறித்து உயரதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு துணை நிற்கும். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும், சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இனி ஜில் தான் ப்ரோ.. வானிலை மையம் முக்கிய அறிவிப்பு! - TAMILNADU RAIN UPDATE

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.