ETV Bharat / bharat

பஞ்சாப்பில் தனித்து போட்டி- ஆம் ஆத்மி அதிரடி! அடுத்தடுத்து காங்கிரசுக்கு பின்னடைவு! இந்தியா கூட்டணியில் விரிசல்? என்ன காரணம்? - Bhagwant Mann

Lok Sabha polls: மேற்கு வங்கத்தை தொடர்ந்து பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி கட்சி மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 3:49 PM IST

Updated : Jan 25, 2024, 1:32 PM IST

பாட்டியலா : பஞ்சாப்பில் உள்ள 13 மக்களை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சி அறிவித்துள்ளது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இருப்பினும் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து நீடிக்கிறது என பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான் தெரிவித்து உள்ளார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி மும்முரம் காட்டி வருகிறது. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிர கட்டத்தை அடைந்து உள்ளன.

பல்வேறு கட்டங்களாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தன. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என்றும் எதிர்வரும் மக்களவை தேர்தலை தனித்து எதிர்கொள்ள உள்ளதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

மம்தா பானர்ஜி அறிவித்த சில மணி நேரங்களில் பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என முதலமைச்சர் பக்வத் மான் தெரிவித்து உள்ளார். டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அந்த கட்சியின் பஞ்சாப் அணி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பேசிய முதலமைச்சர் பக்வந்த் மான், எதிர்வரும் மக்களவை தேர்தலில் பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட உள்ளது என்றார். இருப்பினும் ஆம் ஆத்மி பஞ்சாப் அணி தொடர்ந்து இந்தியா கூட்டணியில் தொடரும் என பக்வந்த் மான் கூறினார்.

தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சியின் பிடிவாத அணுகுமுறையே அதற்கு பின்னடைவாக அமையக் காரணம் எனக் கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடும் ஆம் ஆத்மி பஞ்சாப் அணியின் முடிவிற்கு, டெல்லி ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

முன்னதாக மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இதே போன்ற குற்றச்சாட்டை காங்கிரஸ்க்கு எதிராக முன்வைத்து இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க மம்தா பானர்ஜி விரும்பியதாகவும், ஆனால் காங்கிரஸ் தரப்பில் இருந்து 10 முதல் 12 தொகுதிகள் கோரிக்கையாக வைக்கப்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த நிர்வாகி தெரிவித்தார்.

இதையும் படிங்க : மம்தா இல்லாத இந்தியா கூட்டணியா? நினைத்து கூட பார்க்க முடியாது! - காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ் திடீர் பல்டி!

Last Updated : Jan 25, 2024, 1:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.