சிந்த்வாரா: தீபாவளி என்றவுடன் உற்சாகத் துள்ளல்களோடு அதனை எதிர்கொண்டு காத்திருப்பது நம்முடைய இயல்பு. பட்டாசு, பலகாரம், புத்தாடை, சினிமா போன்ற பல்வேறு கொண்டாட்டங்கள் நிறைந்த காலத்தில் வாழ்கிறோம். நாளைய தினம் வீதி எங்கிலும் வெடி சத்தை காதை பிளக்கும்.பலரும் புத்தாடைகளை உடுத்தி தீபாவளி திருநாளை மகிழ்ச்சி உடன் கொண்டாட ஆவலுடன் உள்ளனர். இதற்கிடையே ஒரு கிராமமே தீபாவளி திருநாளை கொண்டாடாமல், அதனை துக்க நாளக அனுசரிப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள 'ராவன்வாடா' என்ற ஒரு பழங்குடியின கிராமத்தில்தான் இது போன்ற நிகழ்வு நடைபெறுகிறது. இங்குள்ள பழங்குடியினர் தசராவுக்குப் பிறகு ஒன்றரை மாதங்கள் துக்கம் அனுசரிப்பதால் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை என்கின்றனர்.
ராமர், ராவணனை வதம் செய்த பண்டிகை தான் தசரா அல்லது தீபாவளி என புராணங்களில் கூறப்படுகிறது. ஒரு அரக்கனை கொன்று தன் மனைவியை மீட்ட நிகழ்வை நினைவுறுத்தவே ஆண்டுதோறும் நாடு முழுவதும் ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது. ஆனால் ஏன் இந்த இந்திய கிராமத்தில் மட்டும், இராவணன் உருவபொம்மை எரிக்கப்படுவதில்லை என்பதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இதையும் படிங்க: "அன்னைக்கு எங்க வீடுகளில் கஞ்சி மட்டும்தான்" 60 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத விநோத கிராமங்கள்.. சிவகங்கையில் நடப்பது என்ன?
இது குறித்து அகில இந்திய பழங்குடியினர் மேம்பாட்டு கவுன்சில் மாவட்ட தலைவர் மகேஷ் சாரதி கூறுகையில், "ராவணன் இறந்ததை, பழங்குடியினர் துக்கமாக அனுசரிக்கின்றனர். மேலும் ராவணனும், மேகநாதரும் தங்களை பேரழிவுகளில் இருந்து காப்பதாக இங்குள்ள கிராம மக்கள் நம்புகின்றனர்" என்றார்.
ராவன்வாடா கிராமத்தில் மலை உச்சியில் ராவணன் கோயில் உள்ளது. தசராவையொட்டி, நாடு முழுவதும் தீமையை வென்றதன் அடையாளமாக ராவணன் உருவபொம்மை எரிக்கப்படும்போது, இங்கே ராவணனை வணங்கி நீண்ட துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இது குறித்து பழங்குடியினர் சங்கத்தின் துணைத் தலைவர் ராகுல் சாரதி கூறுகையில், "பழங்குடியினர் சமுதாயம் சனாதன தர்மத்தை நம்புகின்றனர். இவர்களின் பாரம்பரியத்தின்படி, தீபாவளி அன்று வீடுகளை சுத்தம் செய்து, லட்சுமி தேவியை வழிபடுவார்கள். ஆனால் வீடுகளில் விளக்குகள் ஏற்றி கொண்டாடங்களில் ஈடுபடுவதில்லை" என்றார்.