ஜம்தாரா : ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் பாசஞர் ரயில் மோதி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வித்யாசகரில் இருந்து காலா ஜஹாரியா பகுதிக்கு அங்கா விரைவு (Anga Express) விரைவு ரயில் சென்று கொண்டு இருந்தது. பாகல்பூர் - யஸ்வந்த்பூர் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் நிறுத்தப்பட்டு உள்ளது.
இததையடுத்து ரயிலை விட்டு கீழ் இறங்கிய சில பயணிகள் அருகில் தண்டவாள பகுதியில் நின்று உள்ளனர். அப்போது அசன்சால் - பைத்யநாதம் நோக்கி சென்ற மற்றொரு பாசஞ்சர் ரயில் தண்டவாள பகுதியில் நின்று கொண்டு இருந்த பயணிகள் மீது மோதியதாக கூறப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரயில் மூத்த அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் மீட்பு பணியில் லேசான தொய்வு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்விடத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ ஊர்திகள் கொண்டு வரப்பட்ட நிலையில் தொடர் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ள நிலையில், பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 8 முதல் 10 பேர் வரை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஏர்டெல் நிறுவனர் பாரதி மிட்டலுக்கு இங்கிலாந்தின் உயரிய விருது! இங்கிலாந்து அரசு அறிவிப்பு