ETV Bharat / bharat

19 வயது கர்ப்பிணியை நண்பர்களுடன் சேர்ந்து கொன்ற காதலன்.. விசாரணையில் பகீர் தகவல்! - PREGNANT TEEN MURDER

ஹரியானாவில் 19 வயதான கர்ப்பிணியை கொன்று உடலை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்த காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2024, 4:36 PM IST

டெல்லி: டெல்லியின் நங்லோய் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், அந்த பெண் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து டெல்லி போலீசார் தெரிவித்ததாவது, கொலை செய்யப்பட்ட இளம்பெண் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார். இதனால் அவருக்கு சஞ்சு (எ) சலீம் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாக பழகி நாளடைவில் காதலித்துள்ளனர்.

இதனால் இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். அதன் விளைவாக இளம்பெண் கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பத்தை கலைத்துவிடுமாறு சலீம் கூறி வந்துள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து வந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சலீமை வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் அக்.21 அன்று இளம்பெண் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு சலீமை காண வந்துள்ளார். அப்போது, சலீம் தன்னுடைய நண்பர்கள் பங்கஜ் மற்றும் ரித்திக் ஆகியோருடன் சேர்ந்து வாடகை காரை எடுத்துக்கொண்டு இளம்பெண்ணுடன் ஹரியானாவுக்கு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: விமானப் பயணிகளுக்குக் குறி! புதிதாக கிளம்பியிருக்கும் 'லவுஞ்ச் பாஸ்' மோசடி

பின்னர் ரோஹ்தக் என்ற இடத்திற்கு இளம்பெண்ணை அழைத்து சென்று அங்கு அவரை கொலை செய்துள்ளனர். பிறகு உடலை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நான்கு அடியில் குழியை தோண்டி புதைத்துள்ளனர்.

இதற்கிடையே, சகோதரியை காணவில்லை எனக்கூறி அவரது சகோதரர் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், போலீசார் தனிப்படைகள் அமைத்து இளம்பெண்ணை தேடும் நடவடிக்கைகளில் இறங்கினர்.

அத்துடன், இளம்பெண்ணின் குடும்பத்தார் போலீசாரிடம், தங்களது மகள் அண்மை காலமாக சஞ்சு என்பவரிடம் பழகி வந்ததாகவும், அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். அதனை அடிப்படையாக வைத்து சஞ்சுவை தேடி பிடித்த போலீசார் மேற்படி விசாரணை நடத்தியதில், சஞ்சு என்கின்ற சலீமும், கூட்டாளி பங்கஜ் இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மற்றொரு நண்பர் ரித்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.