டெல்லி: 18வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மதியம் 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 51.87 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், குறைந்தபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 23.575 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 48.52 சதவீதமும், ஆந்திராவில் 40.26 சதவீதமும், பீகாரில் 34.44 சதவீதமும், ஜார்கண்டில் 43.8 சதவீதமும், ஒடிசாவில் 39.30 சதவீதமும், மகாராஷ்டிராவில் 30.85 சதவீதமும், தெலுங்கானாவில் 40.38 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 39.8 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நான்காம் கட்ட மக்களவை தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் முக்கிய போட்டி நிலவுகிறது. இதில் ஏஐஎம்எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா, பாஜக தலைவர் கிரிராஜ் சிங், ஜேடியுவின் ராஜீவ் ரஞ்சன் சிங் (லாலன் சிங்), திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் தலைவர்கள் சத்ருகன் சின்ஹா மற்றும் யூசுப் பதான் உள்ளிட்டோர் அரசியல் களம் கண்டுள்ளனர்.
இதுதவிர பாஜக தலைவர்கள் அர்ஜுன் முண்டா, மாதவி லதா, ஆந்திர பிரதேச காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா ஆகியோரும் தேர்தல் களத்தில் முன்னணியில் நிற்கின்றனர்.
இதையும் படிங்க: இஸ்லாமிய பெண்ணிடம் பர்தாவை விலக்கச் சொல்லி அடையாள அட்டை சரிபார்ப்பு... பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு! - Lok Sabha Election 2024