டெல்லி: டெல்லியின் ரன்ஹோலா பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் மின்சாரம் தாக்கியதில் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் கோட்லா விஹார் பிஎச்-2 பகுதியில் உள்ள மைதானத்தில் 13 வயது சிறுவன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்தை எடுக்கச் சென்ற போது, மைதானத்தில் மின்சார கம்பியை ஏற்றிச் செல்லும் இரும்புக் கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கியது.
சுருண்டு விழுந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் மறைவு! பிரதமர் மோடி இரங்கல்! - Former Minister K Natwar Singh Dies