ETV Bharat / bharat

மருத்துவமனைக்கு வந்த 11 வயது சிறுமியை பூங்காவுக்கு அழைத்து சென்று வன்கொடுமை.. மஹாராஷ்டிராவில் பரபரப்பு..! - disabled girl molested in thane - DISABLED GIRL MOLESTED IN THANE

disabled girl molested in maharashtra: மஹாராஷ்டிராவில் மருத்துவமனைக்கு வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பூங்காவிற்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

போக்சோ தொடர்பான கோப்புப்படம்
போக்சோ தொடர்பான கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 3:26 PM IST

தானே: மஹாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தை சேர்ந்தவர் 11 வயதான மாற்றுத்திறனாளி சிறுமி. இவரது தாத்தா, பாட்டி இருவரும் உடல்நல குறைவால் கல்வாவில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி இவர்களை பார்க்க மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது மருத்துவமனையில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியை, அங்கிருந்த ஒருவர் அருகிலுள்ள பூங்காவுக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

சிறுமியை நீண்ட நேரமாக காணாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை தேடி சென்ற நிலையில் பூங்காவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அப்போது, சிறுமியிடம் அத்துமீறிய நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர் பிரதீப் ஷெல்கே (42) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கொல்கத்தா மருத்துவர் கொலை: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் ஆணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.