தமிழ்நாடு

tamil nadu

பட்டாசு கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு; சரவெடிகள் பறிமுதல்

By

Published : Oct 31, 2021, 5:19 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பட்டாசு கடைகளில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி இன்று (அக். 31) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு விதிகளை மீறி விற்பனை செய்ய வைத்திருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பட்டாசு சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சரவெடிகளை விற்பனை செய்யவோ, சேமித்து வைக்கவோ, ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ கூடாது என அறிவுறுத்தினார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details