இதுதான் தந்தை - மகன் பாசம்.. தெருநாய்களிடம் இருந்து சட்டென மீட்ட வீடியோ வைரல்! - Father saved son from Dogs video - FATHER SAVED SON FROM DOGS VIDEO

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 7:09 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் வெள்ளலூர் மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தனது மகனை இறக்கி விட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் இருந்த நான்கு தெருநாய்கள் குழந்தையை நோக்கி ஓடி வந்துள்ளது. இதனை பார்த்த அந்த சிறுவன் அச்சமின்றி கீழே கிடந்த கல்லை எடுத்து நாய்களை விரட்ட முயன்றுள்ளார். ஆனால், அதற்கெல்லாம் அஞ்சாத தெரு நாய்கள் சிறுவனை சுற்றி வளைத்து கடிப்பதற்காக அருகில் வந்துள்ளது. இதனைப் பார்த்த சிறுவன் அச்சத்தில் கூச்சலிட்டதை கேட்ட தந்தை விரைந்து வந்து சிறுவனை அங்கிருந்து தூக்கிச் சென்ற நிலையில், அந்த தெருநாய்கள் ஓடியது.

இந்த நிலையில், தற்போது இந்தச் சம்பவம் பதிவான வீட்டின் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக தெரு நாய்களின் அட்டகாசம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் தெரு நாய்களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாப்பாக கைத்துக்கொள்ளுமாறும், தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் செயல்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.