தமிழ்நாடு

tamil nadu

நான்காண்டில் விண்ணில் மனிதன்! - மயில்சாமி அண்ணாதுரை திட்டவட்டம்

By

Published : Mar 7, 2020, 5:36 PM IST

Updated : Mar 7, 2020, 11:40 PM IST

விருதுநகர்: நான்கு ஆண்டுகளில் மனிதனை விண்ணுக்கு கண்டிப்பாக அனுப்ப முடியும் என இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நான்காண்டில் விண்ணில் மனிதன்!
நான்காண்டில் விண்ணில் மனிதன்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 'நுட்பம் 2020' என்ற தலைப்பில் அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "2020ஆம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் என கலாம் கூறியதுபோல் பல உயரங்களை நாம் தொட்டுவிட்டோம். ஆனால் இன்னும் சில விஷயங்களை நிவர்த்தி பண்ண வேண்டியுள்ளது.

தற்போது முக்கியப் பணியாக விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறன. அதன் ஒரு பகுதியாக தொழில்நுட்ப ரீதியாக இயந்திர மனிதனைக் கொண்டு விண்வெளிக்கு அனுப்பும் முயற்சி நடைபெறுகின்றன.

நான்காண்டில் விண்ணில் மனிதன்!

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் நிகழ்வு 2022ஆம் ஆண்டு சவாலானதாக இருக்கும். ஆனால் கண்டிப்பாக 2024-2025ஆம் ஆண்டு இத்திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க: தற்காப்புக் கலை மிகவும் அவசியம்' - மயில்சாமி அண்ணாதுரை

Last Updated : Mar 7, 2020, 11:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details