ETV Bharat / entertainment

ஜிம் பயிற்சியின்போது நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு காயம்! - Junior NTR injury - JUNIOR NTR INJURY

Junior NTR injury: பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவரது இடது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு காயம்
நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு காயம் (Credits - IANS)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 14, 2024, 5:26 PM IST

சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் (RRR) படம் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார். தற்போது ஜூனியர் என்டிஆர் தேவாரா பாகம் 1, வார் 2 (War 2) ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தேவாரா முதல் பாகம் (Devara part 1) வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட போது தனது இடது கை மணிக்கட்டில் லேசான சுளுக்கு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், மருத்துவர்கள் ஜூனியர் என்டிஆரின் காயமடைந்த கையில் பாதுகாப்பிற்காக பிளாஸ்டர் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். ஜூனியர் என்டிஆர் காயம் ஏற்பட்ட போதும் தனது தினசரி வேலைகளை செய்து கொண்டு, தேவாரா பட கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் நெருங்கிய வட்டாரம் கூறுகையில், ஜூனியர் என்டிஆர் சில நாட்களுக்கு முன்பு ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது இடது கை மணிக்கட்டில் சிறிய சுளுக்கு ஏற்பட்டது. அப்போதும் ஜூனியர் என்டிஆர் தேவாரா பட கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு முடித்து கொடுத்தார்.

தற்போது குணமாகி வருகிறார் என கூறியுள்ளனர். இந்நிலையில், தேவாரா படம் குறித்து ஜூனியர் என்டிஆர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சற்று முன்பு தேவாரா முதல் பாகத்தில் எனது கடைசி காட்சியை நடித்து முடித்தேன். இது அற்புதமான பயணம். நான் தேவாரா படம் வெளியாகும் செப்டம்பர் 27ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: டிக்கெட் முன்பதிவிலும் சாதனை படைக்கும் தங்கலான்.. சுதந்திர தின ரேஸில் களமிறங்கும் இந்திய படங்கள்.. முழு விவரம்! - Independence day box office clash

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.