ETV Bharat / health

டைப் 1 நீரிழிவு நோயாளிகளை இணைய பதிவேட்டின் மூலம் கண்காணிக்கும் திட்டம் துவக்கம்! - Ma Subramanian on Type 1 diabetes

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 5:36 PM IST

Ma Subramanian on Type 1 diabetes: டைப் 1 நீரிழிவு நோயாளிகளை இணைய பதிவேட்டின் மூலம் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை வழங்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கையேட்டினை  வழங்கும் அமைச்சர் மா. சுப்பிரமணியன்
கையேட்டினை வழங்கும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குநர், தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் டைப் 1 நீரிழிவு நோய் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நீரழிவு நோய்க்கான விழிப்புணர்வு கையேட்டினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

அதன் பின்னர், ஒப்பந்தம் தொடர்பான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதில், முதல்வகை நீரிழிவு நோய்க்கு இணையதள பதிவேடு தொடங்குவதுடன், தொடர்ச்சியாக பதிவேட்டில் இடம் பெற்றிருக்கின்ற அனைவருக்குமே நீரிழிவு நோய் நோயற்ற வாழ்வு முறை மற்றும் சிகிச்சை குறித்து சேவை தரப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, டைப் -1 நீரழிவு நோய்க்கான இணைய பதிவேட்டினை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில அளவிலான டைப் 1 நீரழிவு நோய்க்கான இணைய பதிவேட்டை தொடங்கி, அதன் மூலம் நடவடிக்கை எடுப்பது தமிழ்நாடு தான்.

இந்த டைப் 1 நீரிழிவு நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் மற்றும் இளம் வயதினர் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடியதாக இருக்கிறது. ஆனால் அவை அறியப்படாமல் வயது அதிகரித்த பின் கண்டறியப்படுகின்றனர். இந்த இணையதள பதிவேட்டின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

மேலும் இந்த டைப் -1 நீரழிவு நோய் என்பது உடலில் இன்சுலின் உற்பத்தியைக் குறைக்கிறது. இதனால் கணையம் பாதிக்கப்படுகிறது. இந்த இன்சுலின் என்பது ரத்தத்தின் சர்க்கரை நோய் அளவை பராமரிப்பதில் பெரும்பங்காற்றும் நிலையில், டைப் 1 நீரழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் இன்சுலின் சிகிச்சையை சரியான முறையில் எடுக்காவிட்டால் தீவிர பாதிப்புகளை உருவாக்குகிறது.

இதில் முதன்மையாக சிறுநீரகங்கள், நரம்புகள், கண்கள் போன்ற உறுப்புகள் அதிக பாதிப்படைகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, டைப் 1 நீரிழிவு நோயுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 8,60,423 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியான பாதிப்பாளர்கள் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர்களாக இருக்கின்றனர்.

உதாரணத்திற்கு, 10 வயதில் ஒரு இந்தியர் டைப் 1 நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டால், அவருடைய வாழ்க்கை சராசரியாக 32 ஆண்டுகள் என்று சொல்லப்படுகிறது. அதுவே, வளர்ந்த நாடுகளில் டைப் 1 நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு வாழ்பவர்களின் காலம் 70 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இந்த அறிவியல் மாற்றத்திற்கு காரணம் இந்தியர்களின் உணவுப் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி பழக்கமாகும். எனவே, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மற்றும் சரியான உடற்பயிற்சி மூலம் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

இந்த ஒப்பந்தத்தின்படி திமுக அரசின் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் கீழ் இருக்கும் 1.86 கோடி பயனாளர்களுக்கும் இந்த ஒப்பந்தத்தின் பயன் செல்ல இருக்கிறது. மேலும், இந்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 46,91,138 பேர் இதுவரை பயனடைந்து வந்தனர்.

இதில் நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,76,067 பேர். எனவே, இரண்டிற்கும் சேர்ந்து 88,67,105 பேர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் காரணமாகத்தான் தொற்றாத நோய்களின் மூலம் ஏற்படும் இறப்புகள் தமிழ்நாட்டில் மிகக் கணிசமாக குறைந்திருக்கிறது.

எனவே, இந்த போர்டல் மூலம் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்காக தனி பட்டியலை தயார் செய்து, அவர்களுக்கு ஏற்ற மருத்துவ வசதிகளை அமைத்து கண்காணிப்பட உள்ளது” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பத்து ரூபாய் கூல்டிரிங்ஸ் குடித்து உயிரிழந்த சிறுமி; அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.