ETV Bharat / technology

Google Pixel 9 Series மொபைலில் இவ்வளவு சிறப்பம்சங்களா? விலை என்ன? முழு விவரம்! - Google Pixel 9 Series

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 3:30 PM IST

Google Pixel 9 Series Mobile in India: கூகுள் நிறுவனம் தனது புதிய ரக பிக்ஸல் 9 வரிசை போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தொகுப்பை இங்கு காணலாம்.

கூகுள் பிக்ஸல் 9 ரக போன்கள்
கூகுள் பிக்ஸல் 9 ரக போன்கள் (Credits - ETV Bharat)

கலிபோர்னியா (அமெரிக்கா): கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் 9 (Pixel 9) சீரிஸ் போன்களை அறிமுகம் செய்துள்ளது. பிக்சல் 9, 9 புரோ, 9 புரோ எக்ஸ்எல் என மூன்று ரகத்தில் வெளியிட்டுள்ளது. இவை கலிபோர்னியாவில் உள்ள மௌண்டைன் வியூ பகுதியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது வெளியாகி உள்ள இந்த பிக்சல் 9 வரிசை போன்களில் மூன்றிலும் நவீன AI தொழில்நுட்பங்களுடன், ஆண்ட்ராய்டு 14 (Android 14)-ல் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் அளிக்கப்படும் என்றும் கூகுள் அறிவித்துள்ளது.

இந்த கூகுள் பிக்ஸல் 9 போன்களில் உள்ள அதி நவீன AI தொழில்நுட்பமான ஜெமினி (Gemini) மூலம், மேஜிக் எடிட்டர் (Magic Editor) அம்சம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படங்களில் மிகவும் எளிமையாக இல்லாதவற்றை சேர்க்கவும், நீக்கவும் முடியும்.

ஆனால், இந்த மேம்படுத்தப்பட்ட ஜெமினி தொழில்நுட்பம் பிக்ஸல் 9 போன்களை வாங்குபவர்களுக்கு ஒர் ஆண்டுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும், பின்னர் மாதாந்திரச் சந்தா கட்ட வேண்டும் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த போன்கள் இம்மாதம் 22ஆம் தேதி முதல் ஷிப்பிங் செய்ய தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

Google Pixel 9 Price: கூகுள் பிக்ஸல் 9 128 ஜிபி ரேம் ரக போன்களின் ஆரம்ப விலை ரூ.74 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிக்ஸல் ப்ரோ ரக போன்களின் ஆரம்ப விலை ரூ.94 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பிக்ஸல் ப்ரோ எக்ஸ் எல் ரக போன்கள் ஆரம்ப விலை ரூ. ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த போன்கள் அப்சிடியன் கருப்பு (Obsidian), விண்டர் கிரீன் (Wintergreen), பியோனி இளஞ்சிவப்பு (Peony), ஹேசல் (Hazel), ரோஸ் குவார்ட்ஸ் (Rose Quartz) உள்ளிட்ட நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போன்கள் ஃப்லிப்கார்ய், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட தளங்களில் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்: பிக்ஸல் 9-ல் 6.3 இன்ச், 1080x2424 Resolution கொண்ட ஓஎல்ஈடி (OLED) ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூகுளின் டென்சார் (Google Tensor) G4 செயல் திறன் கொண்ட சிப் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல், போனின் பின்புறம் இரண்டு கேமராக்களைக் கொண்டுள்ளது.

அவை 50 மெகா பிக்ஸல் வைட் ஆங்கிள் லென்சும் (wide angle lens), 48 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்சும் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த போன்கள் மால்வேர் எதிர்ப்பு (anti-malwar) மற்றும் ஃபிஷிங் எதிர்ப்பு (anti-phishing) பாதுகாப்புடன் இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், 4700mAh திறன் கொண்ட பேட்டரியும், 45W வேகமான சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ங்கிஸ் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேமில் வரும் இந்த பொன்களின் ஸ்டோரேஜ் 128GB மற்றும் 256GB என இரு ரகங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிக்ஸல் ப்ரோ: அதே 6.3 இன்ச் அளவில் LTPO OLED திறன் கொண்ட டிஸ்ப்ளே அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கேமராவை பொருத்தவரை கூடுதலாக 48 மெகா பிக்ஸல் டெலி போட்டோ லென்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. பிக்ஸல் 9 ப்ரோ ரக மொபைல்களில் 16GB ரேம் மற்றும் 128 GB முதல் 1 TB வரையிலான ஸ்டோரேஜ் அமைக்கப்பட்டுள்ளது.

பிக்ஸல் ப்ரோ எக்ஸ் எல்: இந்த வரிசையின் விலையுயர்ந்த போனான இதில் 6.8 இன்ச் அளவில் 1344x2992 ரெசொலூஷன் கொண்ட LTPO OLED திறன் பெற்ற டிஸ்ப்ளே அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 5060mAh திறன் கொண்ட பேட்டரியும் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இதனை கூகுளின் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்யும் போது 30 நிமிடத்தில் 70 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும் என கூகுள் அறிவித்துள்ளது. 16GB ரேம் மற்றும் 128, 256, 512GB மற்றும் முதல் 1 TB வரையிலான ஸ்டோரேஜ் அமைக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: இது காரா இல்ல கப்பலா? TATA Curvv SUV Coupe ஸ்பெஷல் என்ன? முழு விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.