தமிழ்நாடு

tamil nadu

கரோனா பரவலைத் தடுக்க காய்கறி சந்தையில் கட்டுப்பாடுகள் விதிப்பு

By

Published : Mar 30, 2020, 11:58 AM IST

விழுப்புரம்: கரோனா பாதிப்பு எதிரொலியாக திரு.வி.க. வீதியில் இயங்கிவந்த காய்கறி சந்தை தற்போது புதிய பேருந்து நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

vegetable
vegetable

கரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் திரு.வி.க. வீதியில் இயங்கிவந்த காய்கறி சந்தையில் அதிகக் கூட்டம் கூடுவதால், அதற்கு மாற்றாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி சந்தை அமைக்க மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவுறுத்தினார்.

அதன்பேரில் இன்று புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 100 கடைகளுடன் கூடிய காய்கறி சந்தை அமைக்கப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்க காய்கறிச் சந்தையில் கட்டுப்பாடுகள் விதிப்பு

பொதுமக்கள் சிரமமின்றி காய்கறிகளை வாங்குவதற்கும், கூட்டத்தை தவிர்ப்பதற்காகவும் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று காய்கறிகளை வாங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் சார்பில் வட்டம் வரையப்பட்டிருந்தது. அதன்படி இடைவெளி விட்டு வரிசையாக நின்று பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.

இதையும் படிங்க:பொதுவெளியில் சுற்றிய 11 தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மீது வழக்கு

ABOUT THE AUTHOR

...view details