ETV Bharat / state

அடுத்தடுத்த புகார்களில் சிக்கும் போலீசார்.. தூத்துக்குடியில் அதிரடி பணியிடமாற்றம்! - THOOTHUKUDI POLICE TRANSFER

THOOTHUKUDI POLICE TRANSFER: தூத்துக்குடி முத்தையாபுரத்தில் டாஸ்மாக் ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 3:01 PM IST

THOOTHUKUDI SOUTH ZONE POLICE STATION
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வந்த சிவக்குமார் மற்றும் கம்பியூட்டர் பிரிவில் பணியாற்றி வந்த சந்தனகுமார் ஆகிய இரண்டு பேரும் ஸ்பிக் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, அங்கு பணி செய்து வந்த பாரதி நகரச் சேர்ந்த சேகர் (40) என்பவரை முறைகேடாக மதுபானம் விற்பனை செய்ததாக கூறி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான குற்றச்சாட்டை தொடர்ந்து, முத்தையாபுரம் காவல்நிலையத்தில் பணி செய்து வந்த எழுத்தர் சிவக்குமார் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவில் பணி செய்து வந்த சந்தனகுமார் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட போலீஸ் எஸ்பி பாலாஜிசரவணன் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், தூத்துக்குடி மத்திய பாகம் காவல் சரக பகுதியில் குட்கா புகையிலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் இருந்து பணபேரம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தென்மண்டல தலைவர் கண்ணன், மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களும் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சம்பந்தப்பட்டவர்கள் இரவோடு இரவாக கைது - மு.க.ஸ்டாலின் - Armstrong murder issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.