தமிழ்நாடு

tamil nadu

என் மீது பொய் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது: பவர் ஸ்டார் சீனிவாசன்

By

Published : Aug 21, 2019, 9:40 PM IST

Updated : Aug 21, 2019, 10:15 PM IST

திருச்சி: முறையாக வாதாடாத வழக்கறிஞரிடம் சம்பளம் போக மீதி பணம் கேட்டதால் என் மீது அவர் பொய் வழக்கு தொடுத்துள்ளார் என்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

case-against-power-star

தமிழ்திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் மீது துறையூரைச்சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வரதராஜன் என்பவர், காசோலை மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்தார். இவ்வழக்கிற்கு மணப்பாறையைச் சேர்ந்த பாண்டி என்பவரை வழக்கறிஞராக நியமித்திருந்தார்.

இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிர் பாண்டிக்கும், பவர் ஸ்டாருக்கும் இடையில் சம்பள பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர் பாண்டி சம்பளம் கேட்டதற்கு பவர்ஸ்டார் சீனிவாசன் தன்னை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதாக கடந்த மே மாதம் மணப்பாறை காவல் நிலையத்தில் வழக்கறிர் பாண்டி வழக்குப் பதிவு செய்தார்.

பவர் ஸ்டார் சீனிவாசன்

இந்நிலையில் பவர் ஸ்டார் இவ்வழக்கில் முன்ஜாமின் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில் மூன்றாம் தேதி அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டது. அத்துடன் சம்பந்தப்பட்ட மணப்பாறை காவல் நிலையத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் ஆஜராகி காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுப்பட்டிருந்தது.

இந்த வழக்கு குறித்து பவர் ஸ்டாரிடம் தொலைபேசியில் கேட்ட போது, 'இந்த வழக்கு குறித்து தனக்கு எந்த பயமும் இல்லை. நான் யாரையும் மிரட்டும் தொனியில் பேசவில்லை. மேலும் துறையூர் நீதிமன்றத்தில் என்னுடைய வழக்கு ஒன்றிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய பாண்டி முறையாக வாதாடாததால் துறையூர் நீதிமன்றம் எனக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இது பற்றி பாண்டியிடம் தொலைபேசியில் பேசி முறையாக வாதாடாததால், கொடுத்த பணத்தில் சம்பளத்தை தவிர மீதி பணத்தை திருப்பித்தருமாறு கேட்டேன். அதை தராமல் சமாளிக்கவே என் மீது பொய் வழக்கு தொடுத்துள்ளார்.' என கூறினார்.

வழக்கறிஞர் பாண்டி இது பற்றி கூறும் போது, பவர் ஸ்டார் சீனிவாசன் தன்னை மிரட்டியதற்கான ஆதாரம் உள்ளதாக தெரிவித்தார்.

Last Updated : Aug 21, 2019, 10:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details