தமிழ்நாடு

tamil nadu

நிவாரணப் பொருட்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர்!

By

Published : Jun 1, 2021, 8:59 AM IST

திருவாரூர்: நன்னிலத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா நிவாரணத் தொகுப்பை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ்
முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ்

கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழ்நாட்டில் தளர்வுகற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு ஏழை - எளிய மக்கள், தூய்மைப் பணியாளர்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக நன்னிலம், பேரளம், குடவாசல், வலங்கைமான் பேரூராட்சிகளில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், தன்னலமற்று பணிபுரியும் முன்களப் பணியாளர்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களின் தொகுப்பை நன்னிலம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.காமராஜ் வழங்கினார்.

இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகளும் உறுப்பினர்களும் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சமூக வலைதளங்களுக்கு கிடுக்கிப்பிடி...கருத்து சுதந்திரத்திற்கு தடையா?

ABOUT THE AUTHOR

...view details