தமிழ்நாடு

tamil nadu

சேலத்தில் ஆசிரியரின் பணியிடமாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Dec 14, 2021, 11:49 AM IST

இளம்பிள்ளை அருகே கருத்து வேறுபாட்டால் ஆங்கில ஆசிரியர் ஒருவர் பணியிடமாற்றம் செய்யப்படுவதாக வெளியான தகவலையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலத்தில் ஆசிரியரின் பணியிடமாற்றம் எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
சேலத்தில் ஆசிரியரின் பணியிடமாற்றம் எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

சேலம்: இளம்பிள்ளை அருகே இலகுவம்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. இப்பள்ளியில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆசிரியர் சந்தோஷ் குமார் என்பவர் பணிபுரிந்துவருகிறார்.

இவர் அப்பகுதி பொதுமக்களிடத்தில் அரசுப் பள்ளியில் கற்பிக்கப்படும் ஆங்கில வழிக்கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் 30 குழந்தைகள் மட்டுமே படித்துவந்த அப்பள்ளியில், தற்போது 160 குழந்தைகள் வரை பயின்றுவருகின்றனர்.

மாணவர்கள் போராட்டம் தொடர்பான காணொலி

இதன் காரணமாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை புனிதம், சந்தோஷ்குமாருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று (டிசம்பர் 13) பள்ளிக்கு வந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த மாணவர்கள், பெற்றோர்கள் அலுவலர்களை முற்றுகையிட்டு, சந்தோஷ் குமாரை இடமாற்றம் செய்யக்கூடாது எனப் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காவல் துறை, கல்வி அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: 'அடுத்தாண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் மேல்நிலைப்பள்ளிகளில் சுழற்சிமுறை ரத்து'

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details