தமிழ்நாடு

tamil nadu

கரோனா அறிகுறிகளுடன் இறந்தவரின் உடலைப் புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

By

Published : Apr 18, 2021, 1:58 PM IST

மயிலாடுதுறை: கரோனா அறிகுறிகளுடன் இறந்தவரின் உடலைப் புதைக்க கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து திருப்பியனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராம மக்கள்
கிராம மக்கள்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கருப்பூர் ஊராட்சி திருக்குளம்பியம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (63) என்பவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு (ஏப்ரல் 17) உயிரிழந்தார்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது உடலை கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி குழிதோண்டி புதைப்பதற்காக ஜேசிபி இயந்திரத்துடன் சுகாதாரத் துறையினர் அவரது உடலை திருக்குளம்பியத்தில் மாதா கோயில் பின்புறம் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டுவந்தனர்.

குடியிருப்பின் அருகிலுள்ள இப்பகுதியில் இறந்தவர்களின் உடலைப் புதைப்பதற்கு ஏற்கனவே கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், கரோனா தொற்று ஏற்பட்டு இறந்தவரின் உடலைப் புதைக்கப்போவதாகப் பரவிய தகவலால் கிராம மக்கள் சம்பவ இடத்தில் கூடி கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அவரது உடலைப் புதைப்பதற்காக வந்த ஊழியர்களையும், குழி தோண்டுவதற்காகக் கொண்டுவந்த ஜேசிபி இயந்திரத்தையும் திருப்பி அனுப்பிய கிராம மக்கள் ஆடுதுறை-எஸ். புதூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமாதானப்படுத்த வந்த வருவாய்த் துறை அலுவலர்களைத் திருப்பி அனுப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் இது தொடர்பாக இன்று (ஏப்ரல் 18) காலை 10 மணிக்கு வட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details