ETV Bharat / state

மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த கூடுதல் கால அவகாசம் கேட்ட டாஸ்மாக் நிறுவனம்! - liquor bottle retrun plan - LIQUOR BOTTLE RETRUN PLAN

Madras High Court: தமிழகத்தில் ஒரு நாளைக்கு 70 லட்சம் மது பாட்டில்கள் விற்கப்படுவதால், பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 10:47 PM IST

சென்னை: மலை வாசஸ்தலங்களில் மதுபாட்டில்களை வீசிச் செல்வதால் விலங்கினங்கள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக விற்கவும், திருப்பித் தரப்படும் காலி பாட்டிலுக்கு ரூ.10ஐ திருப்பிக் கொடுக்கும் வகையில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மலைப்பகுதிகளில் அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த திட்டம் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு நேற்று (ஜூலை 5) மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு 250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன என கேள்வி எழுப்பியதற்கு, சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் மது பாட்டில்கள் விற்கப்படுவதாகவும், மாதம் 21 கோடி பாட்டில்களும், வருடத்திற்கு 252 கோடி பாட்டில்கள் விற்கப்படுவதாகவும் டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது.. உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு! - Armstrong Murder Arrested

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.