தமிழ்நாடு

tamil nadu

ஆதரவற்ற முதியவர்களுக்கு கரம் நீட்டிய 'அறம் செய்' தன்னார்வக் குழு!

By

Published : Mar 22, 2020, 8:47 PM IST

நாகப்பட்டினம்: மக்கள் ஊரடங்கு உத்தரவின் காரணமாக மயிலாடுதுறையில் கடைகள் அடைக்கப்பட்டதால் உணவின்றி தவித்த ஆதரவற்ற முதியவர்களுக்கு தன்னார்வக் குழுவினர் உணவுகளை வழங்கியது நெகிழ்சியை ஏற்படுத்தியது.

food for curfew affected people in nagappatinam
food for curfew affected people in nagappatinam

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார். இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் அனைவரும் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம் என்று கூறப்பட்டிருந்தது. இதனை தமிழ்நாடு அரசு நாளை காலை 5 மணி வரை நீட்டித்துள்ளது.

அந்த வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. பேருந்து நிலையம், கடைவீதிகள் என அனைத்து வீதிகளும் வரலாறு காணாத அளவில் பொதுமக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. இவ்வேளையில் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டதால் மயிலாடுதுறை பேருந்து நிலையம் மட்டுமில்லாமல், பல்வேறு பகுதிகளில் ஆதரவற்ற முதியவர்கள் உணவின்றி தவித்துவந்தனர்.

மார்ச் 31 வரை முழுமையாக முடங்கும் பஞ்சாப் - முதலமைச்சர் அதிரடி!

இதையறிந்த மயிலாடுதுறை ‘அறம் செய்’ தன்னார்வக் குழு களத்தில் இறங்கி உணவின்றி தவித்த ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவை வழங்கினர். அதேபோல் புதிய பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உணவின்றி தவித்த ஆதரவற்ற வயதானவர்களைத் தேடிப்பிடித்து மதிய உணவுகளை வழங்கினர். உணவு வழங்கிய தன்னார்வக் குழுவினருக்கு முதியவர்கள் தங்களது நன்றியினைத் தெரிவித்தனர்.

ஆதரவற்ற முதியவர்களுக்கு கரம் நீட்டிய ‘அறம் செய் தன்னார்வக் குழு’

ABOUT THE AUTHOR

...view details