தமிழ்நாடு

tamil nadu

’குஷ்பூ இணைந்ததால் பாஜகவிற்கு புதிய எழுச்சி’: முன்னாள் ஐஆர்எஸ் சரவணன்

By

Published : Oct 18, 2020, 7:08 AM IST

Updated : Oct 18, 2020, 11:06 AM IST

மதுரை: நடிகை குஷ்பூ இணைந்ததால் பாஜகவிற்கு புதிய எழுச்சி உருவாகியுள்ளது என முன்னாள் ஐஆர்எஸ் சரவணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஐஆர்எஸ் சரவணன் பேசிய காணொலி
முன்னாள் ஐஆர்எஸ் சரவணன் பேசிய காணொலி

அண்மையில் பாஜகவில் இணைந்த விருப்ப ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் (இந்திய வருவாய் பணி) அலுவலர் சரவணகுமார், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அவரிடம் பாஜகவில் அரசு அலுவலர்கள் இணைய நிர்பந்தம் செய்யப்படுகிறார்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ”அரசு அலுவலர்கள் யாரையும் பாஜக நிர்பந்திக்கவில்லை, கொள்கைகளால் ஈர்க்கப்பட்டும், அண்மையில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற சில சம்பவங்களும் தன்னை பாதித்ததாலேயே பாஜகவில் இணைந்துள்ளேன். வேறு காரணம் எதுவும் இல்லை” எனப் பதிலளித்தார்.

காங்கிரஸிலிருந்து விலகிய குஷ்பு பாஜகவில் இணைந்து எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும்? ”குஷ்பு அரசியல் மேடையில் 15 ஆண்டுகாலம் அனுபவம் மிக்கவர். அவர் பாஜகவில் இணைந்து ஒரு புதிய எழுச்சியை உருவாக்கும்”

இந்தத் தேர்தலில் அதிக இடங்களை வெல்ல பாஜகவின் வியூகம் எந்த அளவு உள்ளது? ”தமிழ்நாட்டை பாஜக ஆள வேண்டும் என்றுதான் நினைக்கின்றோம். அதற்கான வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தற்போது தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் இருந்தாலும் சட்டப்பேரவையில் யார் தலைமையில் கூட்டணி என்பது மேலிடம் தான் முடிவு செய்யும்”

அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் அரசியல் தலையீடு உள்ளதா?

”தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மிகச்சிறந்த பல்கலைக்கழகம். ஆனால் அங்கு கட்டமைப்பு வசதிகள் குறைவாகவே உள்ளன. ஐஐடிக்கு இணையாக ஆய்வக வசதிகள் பெற வேண்டும் என்றால் சிறப்பு அந்தஸ்து பெற்ற கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு தரமான ஒரு பல்கலைக்கழகமாக உருவாக வேண்டும். ஆனால் தேவையின்றி விஷயத்தை சிலர் அரசியலாக்கி வருகின்றனர்”

முன்னாள் ஐஆர்எஸ் சரவணன் பேசிய காணொலி

இதையும் படிங்க:'அண்ணா பல்கலைக்கழகத்தில் கை வைப்பது மத்திய அரசின் சேட்டை' - சீமான்

Last Updated : Oct 18, 2020, 11:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details