தமிழ்நாடு

tamil nadu

’நானும் விவசாயி தாங்க’: முதலமைச்சரை கலாய்த்த ஸ்டாலின்

By

Published : Dec 23, 2020, 3:42 PM IST

காஞ்சிபுரம்: நானும் ரவுடி என சொல்வது போல தன்னை விவசாயி விவசாயி என முதலமைச்சர் பழனிசாமி சொல்லிவருகிறார் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

முதலமைச்சரை ஏளனம் செய்த ஸ்டாலின்
முதலமைச்சரை ஏளனம் செய்த ஸ்டாலின்

’அதிமுக அரசை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னம் பகுதியில் கிராம சபை கூட்டம் இன்று (டிச.23) நடைபெற்றது.

காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் தொடங்கிவைத்தார். குன்னம் கிராம மக்களிடம் அவர்களின் பிரச்னைகளை நேரடியாக கேட்டு தெரிந்து கொண்டார்.

விளையாட்டு மைதானம்

குன்னம் ஊராட்சியில் விளையாட்டு மைதானம் கட்ட 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிதி ஒதுக்கப்பட்டு கல்வெடு வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித பணியும் இங்கு நடைபெறவில்லை. இதனைக் கண்ட ஸ்டாலின் அது குறித்து தெரிந்து கொண்டு தனது செல்போனில் அக்கல்வெட்டை படம் எடுத்துக்கொண்டார்.

நானும் ரவுடிதான்..

பொதுமக்கள் மத்தியில் பேசிய முக.ஸ்டாலின்,”முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இன்னும் மர்மம் நிறைந்ததாக உள்ளது. நானும் ரவுடி.. ரவுடி.. என்று சொல்வதுபோல் நான் விவசாயி, விவசாயி என்று முதலமைச்சர் கூறிவருகிறார். விவசாயி எனக்கூறி வரும் முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளுக்காக எதையும் செய்யவில்லை.

கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின்

முதலமைச்சர் பழனிசாமி பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு, விவசாயிகளுக்கு பச்சைத்துரோகம் செய்து வருகிறார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் அமைச்சர்கள் செய்த ஊழலை ஆளுநரிடம் புகாராக கொடுத்துள்ளோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். மக்களின் வரிப்பணம் வீணாகக்கூடாது”என்றார்.

கிராமசபையில் பேசிய ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் தாமோ அன்பரசன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்த மோடிக்கு ஸ்டாலின் டிப்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details