தமிழ்நாடு

tamil nadu

80 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி இழப்பு!

By

Published : Aug 28, 2019, 12:08 PM IST

ஈரோடு: பவானிசாகர் அணை ஆய்வு நீர் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு டர்பைன் இயந்திரம் பழுதால் ஒருநாளைக்கு 80 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி இழப்பு எற்பட்டுள்ளதாக சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் ஈடுபட்டுள்ள சட்டப்பேரவை பொதுநிறுவனகள் குழுவினர்

தமிழக சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் மாவட்டந்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பொது நிறுவனங்களின் குழு தலைவரும், மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினருமான செம்மலை தலைமையிலான குழுவினர் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணைக்கு வந்தனர். நீர் அளவீடு செய்யும் பகுதிக்குச் சென்ற அவர்கள் அணையின் நீர் வரத்து, நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

ஆய்வில் ஈடுபட்டுள்ள சட்டப்பேரவை பொதுநிறுவனகள் குழுவினர்

இதைத்தொடர்ந்து அணையிலிருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நுண்புனல் மின்நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பவானிசாகரில் உள்ள மீன் உற்பத்தி பண்ணையை பார்வையிட்டு மீன் வளர்ச்சி குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அந்தக் குழுவின் தலைவர் செம்மலை செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் எங்கள் குழுவினர் 2 நாள் ஆய்விற்காக வந்துள்ளோம்.

பவானிசாகர் அணை மற்றும் நுண்புனல் மின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்ததில், மின் உற்பத்தி செய்யப்படும் ஒரு டர்பைனில் பழுது ஏற்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் யூனிட் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை பழுது நீக்க டெண்டர் விடப்பட்டு, 2 மாதங்களில் பணிகள் நிறைவடைந்து மின் உற்பத்தி தொடங்கும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details