தமிழ்நாடு

tamil nadu

'ஆயிரம் கிடா வெட்டு' புகழ்பெற்ற சுள்ளிக்கரடு கோயில் விழா ஒத்திவைப்பு!

By

Published : May 2, 2020, 3:10 PM IST

ஈரோடு: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் பிரசித்தி பெற்ற சுள்ளிக்கரடு முனியப்ப சாமி கோயில் குருபூஜை விழா ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

sdsd
sds

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சுள்ளிக்கரடு முனியப்ப சாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு சித்திரை பெளர்ணமியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கிடாக்களை வெட்டி விழாவை நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டும் சுள்ளிக்கரடு மினியப்பச்சி குருபூஜை விழா வரும் சித்திரை பௌர்ணமி மே 5ஆம் தேதி நடைபெறும் என கோயில் விழாக்குழுவினர் அறிவிப்பு செய்திருந்தனர்.

ஆனால், கரோனா வைரஸால் ஊரடங்கு மே 17ஆம் தேதிவரை நீடிக்கப்பட்டுள்ளதால் சுள்ளிக்கரடு முனியப்ப சாமி கோயில் குருபூஜை விழாவை அடுத்தாண்டிற்கு ஒத்திவைப்பதாக கோயில் விழாக் குழுவினரும், நிர்வாகத்தினரும் அறிவித்துள்ளனர்.

புகழ்பெற்ற சுள்ளிக்கரடு கோவில் விழா ஒத்திவைப்பு

இந்தாண்டு நேர்த்திக் கடனுக்காக விடப்பட்டுள்ள கிடாய்களை அடுத்தாண்டு வரை வளர்த்து குருபூஜை விழாவில் பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்திக்கொள்ளுமாறும் பக்தர்களுக்கு வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:சென்னையில் அதிதீவிரமாகப் பரவும் கரோனா: 1,000ஐ கடந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை!

ABOUT THE AUTHOR

...view details