ETV Bharat / state

"ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பந்தமாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்"- விசிக எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல் - Armstrong Murder issue - ARMSTRONG MURDER ISSUE

VCK Ravikumar Condemns Armstrong murder: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக எம்பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

எம்பி ரவிக்குமார் மற்றும் ஆம்ஸ்ட்ராங்
எம்பி ரவிக்குமார் மற்றும் ஆம்ஸ்ட்ராங் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 1:09 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக தற்போது வரை 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சம்பத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்திற்கு தங்களது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சார்ந்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இந்த படுகொலை சம்பவத்துக்கு இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில் "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவருக்கு என் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கொலையாளிகள் விரைந்து கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் படுகொலை; 8 தனிப்படைகள் அமைப்பு.. ஈபிஎஸ், அண்ணாமலை கண்டனம்! -

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.