தமிழ்நாடு

tamil nadu

வருமானமின்றி வாழும் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய செங்கோட்டையன்!

By

Published : Apr 30, 2020, 1:18 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் வருமானமின்றி வாழும் மக்களுக்கு அதிமுக சார்பில் அமைச்சர் செங்கோட்டையன் நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.

அமைச்சர் செங்கோட்டையன் நிவாரண பொருட்கள் வழங்ம் காட்சி
அமைச்சர் செங்கோட்டையன் நிவாரண பொருட்கள் வழங்ம் காட்சி

கரோனா தீநுண்மியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் ஊரடங்கினை நீட்டித்துள்ளன. இதனால் வேலையிழந்து, எந்தவித வருமானமுமின்றி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக அரசை நம்பித்தான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் பல்வேறு கட்சிகள், தன்னார்வலர்கள் தங்களாலான உதவிகளை மக்களுக்குச் செய்துவருகின்றனர்.

வருமானமின்றி வாழும் மக்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்

அந்தவகையில், சத்தியமங்கலம் அருகே உள்ள காவிலிபாளையம், கோப்பம்பாளையம், செல்லம்பாளையம், உள்ளிட்ட கிராமங்களில் வருமானமின்றி வாழும் மக்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் அதிமுக சார்பில்வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்துகொண்டு 250 பேருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். மேலும் முகத்திரை, கையுறை ஆகியவற்றை வழங்குவதாகவும் மக்களிடம் செங்கோட்டையன் உறுதியளித்தார்.

கரோனா தீநுண்மி அச்சுறுத்தல் காரணமாக உணவின்றித் தவித்த பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய அமைச்சர் செங்கோட்டையனுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

குறிப்பாக கிராமங்கள்தோறும் வருமானமின்றி வாழும் மக்களுக்கு அதிமுக சார்பில்நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுவருவதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்தவருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details