தமிழ்நாடு

tamil nadu

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக கூட்டணி வேட்பாளருக்கு இஸ்லாமியர்கள் முழு ஆதரவு - வஃக்பு வாரியத் தலைவர்

By

Published : Feb 8, 2023, 5:59 PM IST

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளருக்கு இஸ்லாமியர்கள் முழு ஆதரவு தந்து வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என வஃக்பு வாரியத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக கூட்டணி காங் வேட்பாளருக்கு இஸ்லாமியர்கள் முழு ஆதரவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக கூட்டணி காங் வேட்பாளருக்கு இஸ்லாமியர்கள் முழு ஆதரவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக கூட்டணி வேட்பாளருக்கு இஸ்லாமியர்கள் முழு ஆதரவு - வஃக்பு வாரியத் தலைவர்

ஈரோடு: சத்தியமங்கலம் மஹ்முதியா அரசு நிதியுதவி துவக்கப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா மற்றும் வஃக்பு வாரியம் வழங்கிய ரூ.5 லட்சம் மானியத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் திறப்பு விழாவில் தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் பங்கேற்று புதிய வகுப்பறைகளைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக வஃக்பு வாரியத்தலைவர் அப்துல் ரஹ்மானை முத்தவல்லி அஹ்லே தக்னி சுன்னத் ஜமாத் தலைவர் நிதிமுல்லாக்கான் தலைமையில் நிர்வாகிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அப்துல் ரஹ்மான் பேசுகையில், 'இறைவன் பெயரால் சான்றோர் அர்ப்பணித்த வஃக்பு வாரிய சொத்துகளை பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தும், போலியான ஆவணங்கள் தயாரித்தும் விற்றுள்ளனர்.

இதுபோன்ற போலியாக விற்கப்பட்ட சொத்துகளை மீட்டெடுப்பதில் வாரியம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அண்மையில் முதலமைச்சர் தலைமையில் நடந்த வஃக்பு வாரிய கூட்டத்தில் வஃக்பு சொத்துகள் முறையாக பாதுகாப்பதிலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவதிலும் முறையாக செயல்பட அறிவுறுத்தப்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற திமுக கூட்டணி வேட்பாளருக்கு இஸ்லாமியர் பெருமக்கள் முழு ஆதரவு தந்து வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தியுள்ளதால் மத்திய அரசுக்கு பெரிய சேமிப்பு கிடைக்காது.

ஆனால், தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறது. இஸ்லாமிய ஏழைகள் வீடு வாங்குவது, கட்டுவது போன்ற அறப்பணிகளுக்கு வஃக்பு வாரியம் நிதியுதவி அளித்து வருகிறது' என்றார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 80 பேர் வேட்பு மனுக்கள் ஏற்பு!

ABOUT THE AUTHOR

...view details