தமிழ்நாடு

tamil nadu

கரோனா எதிரொலி: கொடைக்கானலுக்கு வரும் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிவு

By

Published : Dec 12, 2020, 4:34 PM IST

கரோனா பரவல் காரணமாக கொடைக்கானலுக்கு வரும் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Breaking News

திண்டுக்கல்:மலைகளின் இளவரசியான கொடைக்கானல் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி, பிற மாநிலங்கள் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஆனால் கரோனா பரவல் காரணமாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

குறிப்பாக இங்குள்ள முக்கிய பகுதியான வட்டக்கானல் பகுதிக்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் அதிக அளவிலான இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து, அவர்களது மத வழிபாடுகளில் ஒன்றான சபாத் வழிபாட்டில் ஈடுபடுவர். ஆனால் நடப்பு ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக அவர்களது வருகை குறைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொடைக்கானல் வரும் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிவு

இதையும் படிங்க:கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் சிலுவை பூக்கள்!

ABOUT THE AUTHOR

...view details