ETV Bharat / state

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் முடிவில் தலையிட முடியாது; உயர் நீதிமன்றம் திட்டவட்டம்! - Thiruvanmiyur Pamban Swami Temple - THIRUVANMIYUR PAMBAN SWAMI TEMPLE

Thiruvanmiyur Pamban Swami: திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

MHC
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 10:38 PM IST

சென்னை: சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவிலுக்கு ஜூலை 12ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறநிலையத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சைவ சித்தாந்த பெருமன்றம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று (ஜூலை 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமானால் கோயிலில் கொடிமரம், கலசம், பலிபீடம் உள்ளிட்டவை இருக்க வேண்டும். பாம்பன் சுவாமி கோவிலில் இதுவரை எந்த கும்பாபிஷேகமும் நடத்தப்படவில்லை எனவும், தற்போது கும்பாபிஷேகம் நடத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அத்துமீறல் எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அறநிலையத்துறை தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி கும்பாபிஷேகம் நடத்தலாம் எனவும், பாலாலயம் ஏற்கனவே முடிந்து விட்டது எனவும், முருகன், விநாயகர் சிலைகள் உள்ளதால் இது கோயில் தான் எனவும் வாதிடப்பட்டது. இதையடுத்து, பூஜைகள், விழாக்களை அறநிலையத்துறை நடத்தலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்காத நிலையில், கும்பாபிஷேகம் நடத்தும் விஷயத்தில் தலையிட முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.

அதேநேரம், பாம்பன் சுவாமிகள் கோவில் சமாதியா? கோவிலா? என முடிவெடுக்க வேண்டியுள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.