ETV Bharat / state

"விளிம்புநிலை மக்களுக்காக போராடுபவர்களின் பாதுகாப்பிற்கு தனிச் சட்டம் வேண்டும்" - ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்! - Lawyer protest in Madras High Court

Aadhav Arjuna: சாதி, மத ரீதியான பிரச்னைகளுக்கு தமிழக காவல்துறையில் க்யூ பிரிவு போன்ற தனிப்படை அமைக்க வேண்டும் என்றும், விளிம்புநிலை மக்களுக்காகப் போராடுபவர்களின் பாதுகாப்பிற்காக சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 10:55 PM IST

Updated : Jul 11, 2024, 11:03 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.

ஆதவ் அர்ஜுனா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, "ஒரு தலித் தலைவராக உருவாகி இன்று அந்த குறிப்பிட்ட சமூகத்தைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்நாடும் அவருக்காக நியாயம் கேட்கும் அளவிற்கு அவர் அனைவருக்குமானவராக உயர்ந்தார். மேலவளவு முருகேசன் தொடங்கி, தலித் தேர்தல் அரசியலுக்குள் நுழையும் ஆம்ஸ்ட்ராங் வரை படுகொலை செய்யப்படுவதைச் சுலபமாகக் கடந்து செல்ல முடியாது.

ஒரு தலித் அரசியல் தலைவர் உருவாகக் குறைந்தது 20 ஆண்டுகள் ஆகும்போது, இதுபோன்ற படுகொலைகள் எளிய மக்கள் அரசியலுக்கு எதிரான நேரடி அச்சுறுத்தல். ஆம்ஸ்ட்ராங் படுகொலையையும் காவல்துறை இந்த கோணத்தில் விசாரிக்க வேண்டும். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய வழக்கறிஞர்களுக்குப் பாதுகாப்பு வேண்டி சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது.

அதேபோல், விளிம்புநிலை மக்களுக்காகப் போராடும் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு விரைவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். ஒருசிலர் ஆம்ஸ்ட்ராங்கைக் கட்டப்பஞ்சாயத்து செய்பவர், ரவுடி என்று சொல்வதற்கு முதலமைச்சரே நேரடியாகப் பதில் சொல்லியிருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங் குற்றப் பின்னணி இல்லாதவர்: குற்றப் பின்னணியில் இருக்கும் ஒருவரது வீட்டிற்கு இரங்கல் சொல்ல முதல்வர் செல்ல முடியாது. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்குச் சென்றது மட்டுமின்றி, அவர் மீது எந்த புகாருமில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர், பாமக, பாஜக எனப் பல்வேறு கட்சியினரும் அவர் வீட்டிற்குச் சென்று இரங்கல் தெரிவித்தார்கள்.

சாதியை அழித்தொழித்தல் என்று அம்பேத்கர் கூறியபடி அரசியல் அதிகாரத்தில் அதற்காகப் போராடும் தலைவர்கள் கொலை செய்யப்படுவது இன்றைய சூழலை உணர்த்துகிறது. ஏனெனில், வேங்கைவயல் சம்பவத்திற்கு இன்னும் ஒருவர் கூட கைது செய்யப்படாதது, படித்ததற்காக மாணவர் சின்னதுரை மீதான தாக்குதல் போனற சூழல் நிலவும்போது காவல்துறை ஒரு மறுசீரமைப்புக்குச் செல்ல வேண்டும்" எனக் கூறினார்.

சாதி, மத கலவரங்களுக்கு தனி காவல்படை வேண்டும்: தொடர்ந்து பேசிய அவர், "80களில் தீவிர நிலை செயல்களை ஒடுக்க தமிழ்நாடு காவல்துறையில் 'க்யூ பிரான்ச்' போன்ற பிரிவுகள் உருவானது. அதுபோல், இன்றைய அச்சுறுத்தலாக இருக்கும் சாதிய மற்றும் மதக் கலவரங்களுக்கு எதிராகத் தனி காவல்படை உருவாக வேண்டும்.

2014-லிருந்து 2024ஆம் ஆண்டு தேர்தல் வரை தமிழ்நாடு பாஜகவை புறக்கணித்து மதவாதத்திற்கு எதிராகத் தன்னை நிலைநிறுத்தியது. ஆனால், இன்னும் தேர்தல் அரசியலில் எந்த சமூகம் எங்கு அதிகம் இருக்கிறார்கள் என்று பார்த்து அதை வெளிப்படையாகச் செய்யும் சாதிய நிலையில்தான் இருக்கிறோம்.

சாதியால் கட்டமைக்கப்பட்ட அதிகாரத்தையும் சாதியால் உருவான தேர்தல் வெற்றியையும் நாம் தூக்கி எறிய வேண்டும். உத்திர பிரதேசத அயோத்தியில் ஒரு பொதுத் தொகுதியில் தலித் ஒருவரால் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் அகிலேஷ் மற்றும் ராகுல் காந்தி பக்கத்தில் அமர முடிகிறது.

தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு பொதுத் தொகுதி என்பது அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் இதைப்போக்கி அனைவருக்குமான பொது அரசியலைப் பெறப் போராடினார். தனது தொண்டர்களுக்கு கத்தியைப் பிடிக்காதீர்கள், பேனாவைப் பிடியுங்கள் என்று அறிவுரைகள் கூறினார்.

நாம் கொஞ்சம் முன்னோக்கி பச்சை பேனாவைப் பிடியுங்கள் என்று சொல்வோம். ஏனெனில், இனி நம்மால்தான் சிறந்த முறையில் சட்டங்களை காக்க முடியும். 2026ஆம் ஆண்டு அம்பேத்கர் வழியில் செயலாற்றிய நம்மில் ஒருவரே தலைவராகக்கூடும்" என்றார் ஆதவ் அர்ஜுனா.

இதையும் படிங்க: “அரசின் நிர்வாகம் தெரியாமல் பேசுகிறார்” - பிரேமலதா விஜயகாந்திற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

Last Updated : Jul 11, 2024, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.