தமிழ்நாடு

tamil nadu

டெல்லி சிஏஏ போராட்டத்திற்கு சென்ற ஏழு பேருக்கு கரோனா

By

Published : Mar 30, 2020, 12:29 PM IST

கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையிலிருந்து டெல்லியில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு சென்றுவந்த ஏழு பேருக்கும், பொள்ளாச்சியில் இரண்டு பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஆனைமலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

corona-virus-attack-in-pollachi
corona-virus-attack-in-pollachi

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியிலிருந்து சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்காக டெல்லி சென்று வந்த ஏழு பேருக்கு கரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்தப் பரிசோதனையில் ஏழு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோவையில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் பொள்ளாச்சி துணை ஆட்சியர் வைத்தியநாதன், பொள்ளாச்சி வட்டாட்சியர் தணிகாசலம், ஆனைமலை வட்டாட்சியர் வெங்கடாசலம், வால்பாறை துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர் ஆனைமலையில் கரோனாவால் பாதித்த நபர்கள் வசித்த பகுதியில் உள்ள பொதுமக்கள் 1500 பேர் சுகாதாரத் துறை சார்பாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பொள்ளாச்சியிலிருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட ஆனைமலை பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கரோனா பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவர்களால் கரோனா கண்டறியும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து ஆனைமலையிலிருந்து காளியாபுரம், கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், பொள்ளாச்சி செல்லும் அனைத்து சாலைகளும் தற்போது அடைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் பொள்ளாச்சியைச் சேர்ந்த 2 பேருக்கு கரோனா பாதித்ததால் அவர்கள் வசித்த பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 67ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:ஒரே நாளில் ஒரு லட்சம் நபர்களிடம் ஆய்வு - சென்னை மாநகராட்சி

ABOUT THE AUTHOR

...view details