தமிழ்நாடு

tamil nadu

பொள்ளாச்சி ஜெயராமன் மீது வழக்குப்பதிவு

By

Published : Mar 29, 2021, 3:56 PM IST

கோயம்புத்தூர்: சட்டப்பேரவை துணை சபாநாயகரும், அதிமுக வேட்பாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கிபாளையம் காவல் நிலையம்
வடக்கிபாளையம் காவல் நிலையம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையம் பகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜனை ஆதரித்து பெண் விடுதலை இயக்க கட்சியைச் சேர்ந்த சபரிமாலா நேற்று (மார்ச்.28) தேர்தல் பரப்புரை செய்துள்ளார். அப்போது, பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பாலியல் ரீதியான பிரச்னையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கவும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறி வாக்கு சேகரித்தார்.

இந்தப் பரப்புரையால் ஆவேசமடைந்த அதிமுகவினர், திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வாக்குவாதம் முற்றவே இருதரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வடக்கிபாளையம் காவல் நிலைய காவல் துறையினர் இருதரப்பினரிடையே பேசி சமாதானப்படுத்தினர்.

தொடர்ந்து, ஒக்கிலிபாளையம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி கொடுத்த புகாரின்பேரில், வடக்கிபாளையம் காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்திவருகின்றனர்.

வடக்கிபாளையம் காவல் நிலையம்

இது தொடர்பாக கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் கூறுகையில், “திமுகவின் வெற்றியை தடுப்பதற்காகத்தான் அதிமுகவினர் வன்முறையை தூண்டிவிடுகின்றனர். மக்களை பிளவுபடுத்தி வெற்றியடைய ஜெயராமன் திட்டமிட்டிருயிருக்கிறார்” என்றார்.

இதையும் படிங்க:வாக்குச் சேகரிப்பின்போது நடனமாடிய எஸ்.பி. வேலுமணி

ABOUT THE AUTHOR

...view details