ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் ஜூன் மாதம் 23 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்விற்கான தேர்வு மதிப்பெண் முடிவுகள் நவம்பர் 25ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களின் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது தேர்வில் தகுதி அடைந்தவர்கள் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேர்வர்களின் தேர்வின் விவரப்பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உரிய சான்றிதழ்கள் மற்றும் பிற விபரங்களை டிசம்பர் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதிவரை தேர்வர்கள் உரிய காலத்திற்குள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.