ETV Bharat / state

"நீட் தேர்வை முதலில் ஆதரித்தவன் நான்.. ஆனால் தற்போது" - கிருஷ்ணசாமி வேதனை! - PTK Krishnasamy - PTK KRISHNASAMY

PTK Krishnasamy: இந்திய அரசியல் சட்டத்தின் பெயர்கள் இந்தியில் இருப்பதால் அனைவரும் உச்சரிக்க முடியாது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி புகைப்படம்
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 7:28 PM IST

கோயம்புத்தூர்: குனியமுத்தூர் பகுதியில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம், நீட் தேர்வு குளறுபடிகள், விவசாயிகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து பேசினார். இதில் பேசிய அவர்,

கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் உண்மையைக் கண்டறிய அரசியல் கட்சிகள் சார்பாக பல்வேறு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் கோரிக்கை சட்டமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கோரிக்கை ஏற்க வேண்டும். அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும். முதல்வர் இந்த விஷயத்தில் கவலை கொள்வது மட்டும் போதாது, நிரந்தர தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

புதிய தமிழகம் கட்சி சார்பிலும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஒன்றே தீர்வாகும். இது சம்பந்தமாக ஜீலை 6ஆம் தேதி மதுவிலக்கு குறித்து ஆலோசனைக் கூட்டம் என் தலைமையில் கோவையில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் இல்லாத மரபுகளை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஏற்படுத்தியுள்ளனர். உறுதிமொழி தாண்டி ஒருசிலர் பெயர்கள், முழக்கம் எழுப்பியுள்ளனர்.

பாலஸ்தீனம், இந்து ராஷ்டிரம் போன்ற முழக்கம் வருவதற்கு காரணமாக அமைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாற்றும் நிலை இருக்கக்கூடாது. இப்போது உள்ள தேர்தல் அமைப்பு கலைக்கப்பட வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும்.

நீட் தேர்வு: நீட் தேர்வை முதலில் ஆதரித்தவன் நான். ஆனால், வணிக நோக்கில் செயல்படத் தொடங்கி உள்ளது. மாணவர்களின் உண்மையான திறமை அடிப்படையில் செயல்பட வேண்டும். நீட் தேர்வில் மோசமான நிலை உருவாகியுள்ளது. நீட் பயிற்சி நிலையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன. நீட் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களின் புகைப்படங்களை தடை செய்ய வேண்டும். நீட் தேர்வில் கோடிக்கணக்கில் செலவு செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் இருந்த சட்டங்கள் இந்தியில் உள்ளது. அனைத்து மொழி பேசும் மக்கள் பேசும் அளவிற்கு அதை வழிவகை செய்ய வேண்டும். சட்டத்தின் பெயர்கள் இந்தியில் இருப்பதால் அனைவரும் உச்சரிக்க முடியாது. வழக்கறிஞர் கோரிக்கைகள் நியாயமானது" இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை; மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்பு! - Magalir Urimai Thogai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.