தமிழ்நாடு

tamil nadu

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

By

Published : Jun 2, 2021, 7:37 PM IST

ஈ டிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

டவ் தே புயல்: காணாமல் போன மீனவர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சென்னை:டவ் தே புயலில் காணாமல் போன மயிலாடுதுறை, நாகை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு: நாளை ஆன்லைனில் கருத்துக் கேட்பு

சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நாளை ஆன்லைன் மூலம் கருத்துக் கேட்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி கைது!

ரவுடியைப் பிடிக்கச் சென்ற தனிப்படை உதவி ஆய்வாளர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவர் படுகாயமடைந்தார்.

பழனியருகே கோயில் சிலை உடைப்பு

திண்டுக்கல்: பழனியருகே கோயில் சிலையை உடைத்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இந்தியாவில் 1.64 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு

இந்தியாவிலுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1.64 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

’உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தியை பெருக்கும் திட்டம்’ - மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி

தகுதியான பொதுமக்கள் அனைவருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மூன்று பொதுத் துறை நிறுவனங்களுக்கு தடுப்பூசியை தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

'தெலங்கானா கடின உழைப்பாளிகள் நிறைந்த மாநிலம்' - பிரதமர் வாழ்த்து

தெலங்கானா மாநில நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி இறக்குமதிக்கு கனிவுகாட்டிய டிசிஜிஐ: விதிகளில் தளர்வுகள்!

வெளிநாட்டு தடுப்பூசிகள் இந்திய சந்தைக்கு தாமதமின்றி வந்தடைய பெரும் தடங்கலாக இருந்த நடைமுறையை நீக்குவதாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) தெரிவித்துள்ளது.

நடிகர் மங்களநாத குருக்கள் இறந்து விட்டதாகக் கூறி இணைத்தில் பணவசூல்: மோசடி ஆசாமிகள் மீது புகார்

சென்னை: உயிருடன் இருக்கும் தன்னையும், தன் குடும்பத்தாரையும் இறந்து விட்டதாகக் கூறி அடக்கம் செய்ய பணம் வசூல் செய்தவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த மங்களநாத குருக்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

’சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர் இளையராஜா’ - கமல்ஹாசன்

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளுக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details