தமிழ்நாடு

tamil nadu

அறிவியல் திருவிழா அறிவியல் மனநிலையை வளர்க்கும் - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்

By

Published : Dec 8, 2020, 8:46 PM IST

சென்னை: சர்வதேச அறிவியல் திருவிழாவை நடத்துவதன் மூலம் அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க துறையினரிடையே, அறிவியல் மனநிலையை வளர்க்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

Minister
Minister

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அறிவியல் ஆய்வு மையங்களில் பல முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. லடாக்கில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின்(டிஆர்டிஓ) உயரமான மலைப்பகுதி ஆய்வு மையப் பிரிவும், இந்த முன்னோட்ட நிகழ்ச்சியை நடத்தியது. இதில் காணொலி காட்சி மூலம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் உரையாற்றினார்.

அப்போது பேசிய ஆவர், 'டிஜிட்டல் தளம் மூலம் நாட்டில் அனைத்து தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களையும், இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவால்(ஐஐஎஸ்எப்) ஒன்றிணைக்க முடியும். இதன் காரணமாகவே சர்வதேச அறிவியல் திருவிழாவை நடத்துகிறோம். இந்த அறிவியல் திருவிழாவில், 10,000க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளை ஒன்றிணைத்து அவர்களின் ஆய்வு முடிவுகள் பற்றி ஆராய்ந்து, புதுமையான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இது மாணவர்களாலும், அறிவியல் ஆர்வலர்களாலும், ஒவ்வொரு ஆண்டும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியாகும்' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details