அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் மீன்சுருட்டி காவல் சரக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி வைத்திருப்பதற்காக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் மீன்சுருட்டி பகுதியில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்பொது சந்தேகத்திற்குரிய வகையில் பெங்களூரில் இருந்து வந்த கார் ஒன்றை சோதனை செய்த காவல் துறையினர், காரில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை கைப்பற்றி அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த கார் மூலம் அவர்கள் அன்பு மளிகை என்பவருக்கு சொந்தமான குடோனுக்கு புகையிலை பொருட்களை கொண்டு செல்லவிருந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து குடோனை ஆய்வு செய்த காவல் துறையினர், மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கு லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து காவல்துறையினர் குடோனில் இருந்தவர்களை கைதுசெய்ய முற்பட்டபோது குடோனின் உரிமையாளர் தப்பி ஓடியதால் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 99% காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!